தகுதியற்ற நபர்கள் பெரிய பதவிகளில் வந்து அமரும் போது தங்கள் மீது மிகைப்படுத்தப்பட்ட பிம்பங்களை கட்டமைத்துக் கொள்வதில் தான் கண்ணும், கருத்துமாக இருப்பார்கள். அவர்களிடம் எப்போதும் ஒரு இன்செக்யூரிட்டி பீலிங் ஓடிக் கொண்டே இருக்கும். அதை மறைத்துக் கொள்ளவே அதிக கெத்து காட்டுவார்கள்..! அந்த வகையில் அனுதினமும் வளைய வந்து கொண்டிருப்பவரே தினமணி வைத்தியநாதன்! திறமையான இளைஞர்களை தீர்த்துக்கட்டி, வெளியனுப்பு; தினமணி என்றாலே கார்ட்டூனிஸ்ட் மதி தான் அனைவர் நினைவுக்கும் வருவர். தனக்கு மிஞ்சி மதிக்கு பேர் வருவதாக கருதிய வைத்தியநாதன் ”ஒன்று நான் ...
”எப்படி சார் கருத்தியல் ரீதியாக முற்றிலும் மாறுபட்ட துக்ளக்கில் வேலை பார்த்தீங்க..?” என்பது அடிக்கடி நான் சந்திக்க நேரும் கேள்வி! நான் துக்ளக்கில் ஒரு முழு நேர பத்திரிகையாளராக பணியாற்றவில்லை. நான் ஒரு சுதந்திரப் பத்திரிகையாளனாக தொடர்ந்து சுமார் ஒன்பதாண்டுகள் எழுதினேன். அதற்கும் முன்பாக துக்ளக்கிற்கு ஒரு போட்டோ ஜர்னலிஸ்டாக நிறைய வேலை செய்துள்ளேன். 1985 ல் ஜனசக்தியிலேயே எழுத ஆரம்பித்த நான் துக்ளக்கில் 1996ல் தான் எழுதத் தொடங்கினேன். எனக்கும் துக்ளக் ஆசிரியர் குழுவிற்கும் பரஸ்பர புரிதல் வருவதற்கே சில ஆண்டுகளாயின! என்னை ...