மத்திய அரசின் புதிய தேசியக் கல்விக் கொள்கையை தமிழ்நாடு அரசு ஏற்றுக் கொள்ளாததால் தான் தமிழகத்துக்கான கல்வி நிதியை மத்திய அரசு கொடுக்க மறுக்கிறது என்பது உண்மையா? எதார்தத்தில் தேசிய கல்விக் கொள்கையை தமிழக அரசு முழுமையாக நடைமுறைப்படுத்தி அல்லவா வருகிறது…? உண்மை என்ன..? ‘இந்தியாவில் பள்ளிக் கல்வியின் மிக முக்கியமான பிரச்சனை, அரசிடமிருந்து நிதி உதவி கிடைக்காதது தான்’ என்று  Uncertain Glory என்ற நூலில் குறிப்பிடுகிறார்கள் அமர்த்தியா சென் மற்றும் ஜீன் டிரஸ். தமிழ்நாட்டில் இயங்கும் ஒவ்வொரு செய்தி  ஊடகமும் இப்பிரச்சனையை ...

ஒரு சமூகத்தின், அந்த மண்ணின் அடையாளம் கல்வி தான்! கல்வியில் தவறாக கைவைப்பது ஒரு சமூகத்தையே காவு கொடுப்பதாகும். அந்த வகையில் தமிழ்நாட்டிற்கான ஒரு கல்விக் கொள்கை உருவாக்க குழு அமைக்கப்பட்டது ஒரு வரலாற்று நிகழ்வு! இது ஒரு சடங்கோ, சம்பிரதாயமோ அல்ல…! 2021-22ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் “தமிழகத்தின் வரலாற்று மரபு, தற்போதைய நிலைமை, எதிர்காலக் குறிக்கோள்களுக்கு ஏற்ப, மாநிலத்திற்கெனத் தனித்துவமான மாநிலக் கல்விக் கொள்கை ஒன்றை வகுப்பதற்கு, கல்வியாளர்கள் மற்றும் வல்லுநர்களைக் கொண்ட உயர்மட்டக் குழு ஒன்றை இந்த அரசு அமைக்கும்’’ ...

இந்தியாவில் எந்தப் படிப்புக்கும் இல்லாத வகையில் மருத்துவ கல்விக்கு பெரிய மவுசையும், மாயத் தோற்றத்தையும் கட்டமைத்து எம்.பி.பி.எஸ் படிப்பதை சமூக அந்தஸ்தாக்கிவிட்டார்கள்! ஆனால், அரசு மருத்துவர்களுக்கு நியாயமான சம்பளம் கூட இல்லை! இன்னொருபுறம் புற்றீசல் போல தரமற்ற தனியார் மருத்துவ கல்லூரிகள் பெருகுது..! ”இப்ப தமிழ் நாட்டில இன்ஜினியரிங் கல்லூரிகள் பெருகியதால பல கல்லூரிகளில் படிக்க ஆள்வராமல் காத்து வாங்கிட்டு கெடக்குது! இன்ஜினியரிங் படிசவங்களில் 80 சதமானோருக்கு சரியான வேலை கிடைக்கிறதில்லை. வருங்காலத்தில் மருத்துவக் கல்லூரிகளுக்கும் அந்த நிலைமை வரக் கூடும். டாக்டர்களுக்கு நோயாளிகள் ...

நீண்ட கால ஆசிரியர்களின் பணியிட மாற்றக் கோரிக்கைகளை ஆட்சிக்கு வந்து இத்தனை நாள் ஆறப் போட்டுவிட்டு தற்போது அவசரம் காட்டினால் ஏற்படப் போகும் விபரீதங்களுக்கு யார் பொறுப்பேற்பது..? விருப்பப்பட்ட இடங்களுக்கு ஆசிரியர்கள் பணியிட மாறுதல் பெறுவதற்கு ஏதுவாக வெளிப்படையான கலந்தாய்வு அதிமுக ஆட்சிக் காலத்தில் ஜெயலலிதா முன்னெடுப்பால் அறிமுகப்படுத்தப்பட்டு தற்போது வரை பின்பற்றப்பட்டு வருகிறது. கணவன் ஓரிடத்தில், மனைவி ஓரிடத்தில் என குடும்பங்களை பிரிந்து பணியாற்றும் ஆசிரியர்கள் பணியிட மாறுதல்கள் கேட்பதும், அந்தச் சூழ்லைப் பயன்படுத்தி கையூட்டு ஆதாயம் அடையும் அற்பர்களும் கல்வித் துறையில் ...

தமிழகப் பள்ளிக் கல்வியின் சவால்கள் : 5 வழக்கமான பாடங்கள்,படிப்புகளுக்கு இடையே ஓவியம், பாடல்,விளையாட்டு, தையல் உள்ளிட்ட கைத்தொழில்கள், தோட்ட பராமரிப்பு, போன்ற வகுப்புகள் வரும் போது மாணவர்கள் அளவிலா மகிழ்ச்சி அடைகிறார்கள்! இதைத் தான் வாழ்க்கை கல்வி என்பார்கள்! நமது தேசத் தந்தை மகாத்மா காந்தி இதைத் தான் ஆதாரக் கல்வி என்றும், அவசியமான செயல்பாடு என்றும் சொல்கிறார்! இந்த ஆனால், தொழில்கல்விக்கான ஆசிரியர்கள் நியமனம், சம்பளம் தொடர்ச்சியான வகுப்புகள் ஆகியவற்றில் தற்போதைய தமிழக அரசுக்கு போதுமான புரிதல் இல்லாத நிலையே உள்ளது. ...

சவால்களை சந்திக்கும் தமிழக பள்ளிக் கல்வி – 1 அரசுப் பள்ளிகள் பல்லாயிரக்கணக்கான ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படாமல் தள்ளாடுகின்றன! இந்தச் சூழலில் லட்சக்கணக்கான தன்னார்வலர்களைக் கொண்டு இல்லம் தேடிக் கல்வி திட்டமாம்! அதற்கு 200 கோடி செலவாம்! ஒன்றிய அரசின் புதிய கல்விக் கொள்கையின் ஒரு அம்சமே இத்திட்டம்! காலப் போக்கில் அரசுபள்ளிகளை காலாவதியாக்கும் ஆபத்துகள் இதில் புதைந்துள்ளன..! நவம்பர் 1 ஆம் தேதி, ஒன்று முதல் எட்டு வகுப்பு வரை கல்வி பயிலும்  குழந்தைகளுக்கு பள்ளிகள் திறப்பு! ஏறக்குறைய  19 மாதங்களாக பள்ளிக்கு ...

தேசிய கல்வி கொள்கை 2020  க்கு எதிர்ப்பு தெரிவித்து அகில இந்திய கல்வி  பாதுகாப்பு கமிட்டி தேசம் தழுவிய பல போராட்டங்களை நடத்தி வருகிறது. இதன் நோக்கம், தனியார்மயம், வியாபாரமயம் ,காவி மயம் -என்பது தான்! இதை அனுமதித்தால் வரும் நாளில் எல்லாவற்றையும் இழந்து நிற்போம்‌.! ஆகவே, இதில் உள்ள தீமைகளை அம்பலப்படுத்தும் விதமாக வருகிற 30, 31 ஆகிய தேதிகளில் மாபெரும் மாநாடு நடைபெறுகிறது. இந்தக் கல்விக் கொள்கை  மதச்சார்பின்மை மற்றும் இந்திய அரசியல் சட்டத்திற்கு எதிரானது. காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை ...

தேசியக் கல்விக் கொள்கையை ஆதரித்து ஊடகங்களும், பிரபல கல்வியாளர்களும் பொய்யான பிம்பங்களைக் கட்டமைத்து மக்களை குழப்புகிறார்கள்! அவர்கள் கட்டமைக்கும் பொய்கள் என்ன..? மறைக்கப்படும் உண்மைகள் என்ன..? ‘தேசிய கல்விக் கொள்கையை எதிர்ப்பதன் மூலம் தமிழ்நாடு கல்வித் தரங்களை மேம்படுத்து வதற்கான தனது வாய்ப்பை இழந்து விடக்கூடும்’ என தி ஹிந்து ஆங்கில நாளிதழ் எச்சரிக்கிறது. பேராசிரியர் பாலகுருசாமியை மேற்கோள் காட்டி ‘தேசிய கல்விக் கொள்கை-2020 தின் ஒரு பகுதியாக தமிழ்நாடு இருக்க விரும்பவில்லை எனில், கல்வித் தரங்களையும், சாதனைகளையும் மேம்படுத்துவதற்கான வாய்ப்பை தமிழகம் இழந்து ...