பிறப்பு சான்றிதழ் இல்லாதவர் வாக்காளராக முடியாதாம். இந்தியக் குடிமகனாகவும் இருக்க முடியாதாம்! ஆளும் கட்சியின் அடியாளாக களம் இறங்கி, சட்டபூர்வமான தேர்தல் ஆணையம், செய்துள்ள சட்ட விரோத செயல்கள் பிரமிப்பை தருகின்றன. வாக்காளர் பட்டியலில் 52,30,000 பேர் அப்புறப்படுத்தப்பட்ட பின்னணி என்ன? பாராளுமன்றம் நான்கு நாட்களாக கொந்தளிப்பில் உள்ளது. பீகாரில் தேர்தல் கமிஷன் வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தம் என்ற பெயரில் சில தில்லுமுல்லுகளை அரங்கேற்றி வருவது தான் இதெற்கெல்லாம் காரணம். பீகார் எதிர்கட்சித் தலைவர் தேசஸ்வி யாதவ் இண்டியா கூட்டணி தேர்தலை ...













