ஊராட்சி தேர்தல் அறிவிப்பு வந்தது தொடங்கி அரசியல் கட்சிகள் பரபரப்பு அடைந்துள்ளன! கட்சி செல்வாக்கோ, கட்சித் தலைமையின் செல்வாக்கோ கருதி விழும் ஓட்டுகளை விட ஒருவர் உள்ளூருக்கு உண்மையாக உழைக்கக் கூடியவரா.? என மக்கள் கணித்து ஓட்டுப் போடும் ஒரே தேர்தல் இது தான்! இந்த தேர்தலை எதிர் கொள்வது எப்படி..? மகிழ்ச்சி! நீண்ட இடைவெளிக்குப் பிறகு நிறுத்தப்பட்டிருந்த ஒன்பது மாவட்டத்தில் ஊராட்சி தேர்தல் வரவுள்ளது! விழுப்புரம், திருநெல்வேலி, காஞ்சிபுரம், வேலூர் ஆகிய மாவட்டங்களுக்கும், அவற்றிலிருந்து பிரிக்கப்பட்டு புதிதாக உருவாக்கப்பட்ட கள்ளக்குறிச்சி, தென்காசி, செங்கல்பட்டு, ...

ஒரு பக்கம் மதுவாலும், மற்றொரு பக்கம் மின் துறையில் 1,73,000 கோடி நஷ்டத்தாலும் தமிழகமே தள்ளாட காரணமானவர் அமைச்சர் தங்கமணியே! இந்த வகையில் தங்கத் தமிழகத்தை தகரத் தமிழகமாக மாற்றியதில் தன்னகரில்லா சிறப்பிடம் தங்கமணிக்கு உண்டு! சாதாரண அதிமுக ஒன்றிய செயலாளராக இருந்த தங்கமணி இன்று ஒட்டு மொத்த நாமக்கல் மாவட்டத்தையும் விலைபேசி வாங்கும் அளவுக்கு செல்வச் செழிப்பில் மலைபோல விஸ்வரூபமெடுத்து கரன்சிகளைக் கொண்டு வெற்றியை கைப்பற்ற துடிக்கிறார்…! குமாரபாளையம் தொகுதி ஏழை,எளிய உழைப்பாளி மக்கள் நிறைந்த தொகுதி! ஒரிரு கைத்தறிகளையோ, விசைத்தறிகளையோ வைத்துக் ...

தற்போதைய தமிழ் திரை உலகில் ட்ரெண்டிங்கில் முதலிடம் வகிப்பது தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தேர்தல் தான். நாட்டில் நடக்கும் பொது தேர்தலைப் போல ஏகபரபரப்புகளுடனும், முஸ்தீபுகளுடனும் களம் காண்கிறார்கள் வேட்பாளர்கள்! மற்ற தேர்தல்கள்  போல இங்கேயும் வாக்களிக்க பணம், இலவசப் பொருட்கள் கொடுப்பது போன்ற  விரும்பத்தகாத  நிகழ்வுகளும் நடந்து கொண்டு தான் உள்ளன. கோல்ட் காயின், ரிசார்ட் கிப்ட் வவுச்சர், அரிசி-பருப்பு, 32″ டிவி,  நட்சத்திர ஓட்டல்களில் பார்ட்டி, குவார்ட்டர் பிரியாணி என்று பல்வேறு அணியினரும் செயலாற்றிக் கொண்டுள்ளனர். கடந்த தேர்தலில் விஷால் வெற்றி பெற்று ...

ஜனநாயகத்தின் பெயரிலான வாக்கு முறை பற்றி கள ஆய்வு செய்து பல அதிர்ச்சி தரத்தக்க உண்மைகளை வெளிக் கொண்டு வந்துள்ளார் இளந்திருமாறன்! தஞ்சை தரணி தான் சொந்த ஊர்! ஆனால்,அமெரிக்காவில் மென்பொருள் பொறியாளராக 15 ஆண்டுகள் பணியாற்றிவிட்டு தமிழகத்தில் ஏதாவது. அரசியல் மாற்றம் வேண்டும் என்பதற்காக எம்.எஸ்.உதயமூர்த்தியின் மக்கள் சக்தி இயக்கம்,சகாயம் ஐ.ஏ.எஸ்சின் மக்கள் பாதை இயக்கம் (மாநில ஒருங்கிணைப்பாளர்) ஆகியவற்றிலும் தீவிரமாக பணியாற்றியவர்! தற்போதுள்ள  மோசடிகளை தவிர்க்கவும், வாக்களிக்க வரமுடியாதவர்கள் வீட்டிலிருந்தே வாக்களிக்கத்தக்க வகையிலும் ஒரு சாப்ட்வேர் உருவாக்கியுள்ளார்! ஜனநாயகத்தை விட இன்னொரு ...