யானைகளை யாருக்குத் தான் பிடிக்காது. அதன் கம்பீரத்தை பார்க்கும் போதே ஏதோ ஒரு உற்சாக ஊற்று நமக்குள் தோன்றுகிறது! அது நடக்கும் நடையழகோ வித்தியாசமானது. அதன் மிகச் சிறிய கண்கள், பெரிய காதுகள், நீண்ட தும்பிக்கை..யாவும் பரவசம் தரக் கூடியவை! வருகிற செப்டம்பர் 10 ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி. யானை முகம் கொண்ட கடவுளை ஆண்டு தோறும் வழிபடும் நாம் யானையை பாதுகாப்பதில் எவ்விதமான அக்கறையை கொண்டிருக்கிறோம்…? ஒரு பக்கம் யானையின் தலைதான் கடவுள். மற்றொரு பக்கம் உயிருள்ள அதே யானையை பிச்சை ...