மோடி – அமித்ஷா கூட்டணியின் மூர்க்கமான நகர்வுகளாக அவசர, அவசரமாக இரு சட்டங்கள்! எதற்கு? சி.பி.ஐ அமைப்பை சிதைக்கவும், அமலாக்கத் துறையை அடிமைத் துறையாக்கவும்! நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தொடங்க சற்று முன்னதாக அவசர அவசரமாக மோடி-ஷா கூட்டணி இரண்டு அவசர சட்டங்களை நவம்பர் 13ந்தேதி பிறப்பித்துள்ளது. அமலாக்கப் பிரிவு இயக்குனர், சி பி ஐ இயக்குனர் ஆகியோரின் பதவிக்காலம் தற்போது இரண்டு ஆண்டுகள் என்று இருப்பதை ஒவ்வொரு வருடமாக நீட்டித்து பதவி தொடரச் செய்யவும், அப்படி ஐந்தாண்டுகள் வரை இத்தகைய பணி நீட்டிப்பு வழங்கவுமான ...