சமூக கட்டமைப்புகளை உருவாக்குவதன் மூலம் நாட்டின் வளர்ச்சிக்கு முதுகெலும்பாய் திகழ்பவர்கள் பொறியாளர்கள். நெடுஞ்சாலைத் துறை, பொதுப்பணித்துறை உள்ளிட்ட துறைகளில் ஊழல் செய்வதற்கு வசதியாகவே திட்டங்களைத் அறிவிக்கின்றது இந்த அரசு! அதுவும் பொறியியல் பணிகளில் நிதி ஒதுக்கீடு வழங்காமல் கூட அவசர கதியில் பல்வேறு திட்டங்களை அறிவிக்கிறது. ஆனால் அந்தத் திட்டங்களை நிறைவேற்றும் பொறியாளர்களுக்கு ஏற்கனவே இருக்கிற ஊதியத்தைக் குறைத்து கட்டப் பஞ்சாயத்து செய்கிறது. அனைத்து மட்டத்திலும் சம்பள உயர்வுக்கான போராட்டங்களை நாம் பார்த்துள்ளோம். ஆனால், ‘’இருக்கிற சம்பளத்தை பறிக்காதே,திருப்பி கொடு’’ என்று போராட்டம் நடத்த ...