நுழைவு தேர்வுகள் என்பதே ஒரு நுட்பமான தாக்குதல் தான்! அனைத்து கல்வி நிறுவனங்களையும் புறக்கணிக்கும் மனநிலைக்கு பெருந்திரள் இளந்தலைமுறையை நிர்பந்திக்கிறதோ…மத்திய அரசு! கற்றுக் கொடுக்கப்படுவதே ஒரு மனப்பாடக் கல்வி முறை தான்! நடைமுறை வாழ்க்கையை ஆழமாக புரிந்து கொள்ள உதவும் கல்வி முறைகள் பற்றிய அடிப்படை விழிப்புணர்வே அரசுக்கு கிடையாது. இந்த நெருக்கடியிலும் தேசிய கல்விக் கொள்கை என்ற பெயரில் தற்போதுள்ள இயல்பான கல்விச் சூழலை கடும் சிக்கலுக்கு உள்ளாக்குகிறார்கள்! 2019ஆம் ஆண்டிற்கான தேசிய கல்விக் கொள்கையிலேயே பொது நுழைவு தேர்வு குறித்து உள்ளது. ...