ஒன்றல்ல, இரண்டல்ல, கணக்கிட முடியாத மோசடிகளைத் தொடர்ந்து செய்தவர்! இவர் கடன் பெறாத வங்கி ஏதாவது இருக்குமா தெரியவில்லை! அதில் ஏமாறாத வங்கி ஏதாவது தேறுமா..இருந்தால் ஆச்சரியம் தான்! குள்ளமான தோற்றம், தொந்தி வயிறு, சற்றே கறுப்பாக இருக்கும் சிவசங்கரன் ரோட்டில் நடந்தால் மல்டி மில்லினர் என்றோ..மிக செல்வாக்கான அரசியல் மற்றும் அறிவு ஜீவிகளை தன்வசம் கொண்டவர் என்றோ யாரும் நம்ப முடியாது! 1980 களில் தொழில்துறையில் காலடி எடுத்து வைத்தது முதல் மோசடியையே மூலதனமாகவும், அரசியல் செல்வாக்குகளையே அரணாவும் கொண்டு தைரியமாக உலா ...