காடுகள், காட்டுயிர்கள், சுற்றுச் சூழல் தொடர்பாக கடந்த 30 வருடங்களாக அக்கறையுடன் இயங்கியும், இவைசார்ந்த ஒளிப்படத் துறையில் செயலாற்றியும் வருபவர் சண்முகானந்தம். இவர் தமிழகக் காடுகளில் மாதக்கணக்கில் தங்கி காட்டுயிர்களை படம் எடுத்தவர். அவரிடம் சமகால சூழலியல் பிரச்சினைகள், குறைந்து வரும் அரிய விலங்கினங்கள், அழிக்கப்பட்டு வரும் காடுகள் ஆகியவை தொடர்பாக நிகழ்த்தப்பட்ட உரையாடல்! சமீபமாக காட்டுவிலங்குகள் மனிதர்கள் வசிக்கும் பகுதிகளுக்கு வரத் தொடங்கியுள்ளன. தற்போது டி-23 புலியை தேடும் விவகாரம் பரவலாக விவாதிக்கப்பட்டு வருகிறது. சூழலியலாளரான நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்? ஒரு காட்டுயிர் ...
இயற்கை தான் நம்மை வாழ்விக்கிறது! அந்த இயற்கைக்கு நாம் என்ன செய்யப்போகிறோம்..? சுற்றிலுமுள்ள இயற்கையை தெரிந்தும், தெரியாமலோ அழித்து கொண்டே இருப்பதால் ஏற்படும் பாதிப்புகள் என்ன..? புதிய கிருமிகளின் தாக்கங்களுக்கும், சுற்றுச் சூழலுக்கும் தொடர்பு உண்டா..? இயற்கையை பாதுகாக்க நமக்கான பொறுப்புகளை உணரவும், உயிரினங்கள், மரங்கள் சூழ இருப்பதால் நமக்கு ஏற்படும் நன்மைகளை அறியவும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நாள் தான் ஜூன் 5. உலக சுற்றுச்சூழல் தினம்! நம்முடைய எந்த செயலும் அடுத்தவரை பாதிக்க கூடாது என்பது போல் அந்த செயல் இயற்கையையும் பாதிக்க ...
சிறைச்சாலைகள் என்றால், அது கொடூர குற்றவாளிகளின் இடம் என்பது பொது புத்தி!. ஆனால் சிறையில் உள்ளவர்களில் மிக பெரும்பாலோர் ஷண நேர உணர்ச்சி வேகத்தால் குற்றமிழைத்தவர்களே. மற்றும் பலர் தங்களை நிரபராதி என நிருபிக்க முடியாமல் சிறைபட்டவர்கள். பெரும்பாலான கிரிமினல்கள் சிறைப்படுவதில்லை.சட்டத்தின் ஓட்டைகளை பயன்படுத்தி சுலபமாக விடுதலையாகி விடுகிறார்கள்! சிறைவாசிகள் எப்படி நடத்தப்படுகிறார்கள்..? கண்ணியமாக வாழும் உரிமை அவர்களுக்கு இல்லையா? “முதல் விடுதலைப் போரில் (1857) தங்கள் ஆட்சியை இழக்கும் நிலை வரை சென்ற வெள்ளையர்கள், இந்தியர்களை அடக்குவதற்காக உருவாக்கப்பட்ட சிறை விதிகளைத்தான் (1864) ...
(பகுதி-4) வீரப்பனுக்கே தெரியாத நல்ல விஷயங்கள் வீரப்பன் நடமாட்டத்தால் காட்டில் நடந்தன. காட்டில் நிறையக் கல்குவாரிகள் உண்டு. வெடிவைத்து பாறைகளைப் பிளக்கும்பொழுது ஏற்படும் சத்தம் 15 கிலோமீட்டர் தூரம் கேட்கும். பொதுவாக விலங்குகள், பறவைகள், சிறு உயிரிகள் சிறு சத்தத்தைக் கேட்டாலும் ஓடி ஒளிந்து கொள்ளும். காடு நூலகம் போல் மிக அமைதியான இடம். அங்கு வெடிச் சத்தம் கேட்டால் அங்கு வாழும் காட்டுயிர்களின் நிலைமை என்னாகும் மற்றும் வெடி வெடிக்கும் பாறைகளுக்கு அருகில் இருக்கும் உயிரினங்கள் நிறைய இறந்துவிடும். இது மட்டுமில்லாமல் இயற்கை ...