அதிகாரம்,செல்வம்..ஆகியவற்றை மையபடுத்தி செயல்படும் அரசியல்வாதிகளுக்கு தாங்கள் ஒன்றுபட்டு நிற்பதற்கும், வேறுபட்டு பிரிவதற்கும் அதுவே காரணமாகிவிடுகிறது! இ.பி.எஸ்ஸையும்-ஒபிஎஸ்ஸையும் ஒன்றுபடுத்தி இருப்பதற்கும் அதுவே காரணம்! சசிகலாவிடம் இவர்கள் ஒன்றுபடமுடியாமல் போவதற்கும் அதுவே காரணம்! எந்த ஒரு மனிதனுக்கும் எதிரி வெளியில் இல்லை! தனக்குள் பேராசை, சுயநலம் என்ற எதிரிகளை பத்திரப்படுத்தி வைத்துக் கொண்டால், வெளியில் இருக்கும் எதிரியை எதிர்கொள்ள முடியாமல் போய்விடும்! சசிகலாவை இந்த ஆட்சியாளர்கள் எதிர்க்கமுடியாமல் தடுமாறிய போது தான் தெரிய வந்தது இவர்கள் ஆட்சி என்றால், அதிகாரபூர்வமாக பொதுச் சொத்தை அனுபவிப்பது என்பதற்கு மேலாக ...