அதிமுக பொதுக் குழு தொடர்பாக நீதிமன்றங்கள் எத்தனை முறை தான் எப்படியெல்லாம் மாற்றி, மாற்றி நியாயம் பேசுவார்களோ..! இரண்டுங் கெட்டான் தலைமையில் அதிமுகவை கொண்டு நிறுத்துவதே பாஜகவின் நோக்கம்! அந்த நோக்கத்தை ஈடேற்றவே நீதித் துறையிலும் பெரும் நிர்பந்தம் செலுத்தப்பட்டதோ…? சசிகலாவை பொதுச் செயலாளராகத் தேர்ந்தெடுத்துவிட்டு அதை செல்லாமல் ஆக்கிய வழக்கில் இவ்வளவு மெனக்கிடல்கள் இல்லை. ஆனால், ”எங்க ஆளான ஒ.பன்னீர் செல்வத்தை ஒருங்கிணைப்பாளர் பதவியில் இருந்து தூக்க அனுமதிப்பதா?” என பாஜக கங்கணம் கட்டிக் கொண்டு களத்தில் கமுக்கமாக காய் நகர்த்தி வருகிறது. ...
இ.பி.எஸ், ஓ.பி.எஸ் ஆகிய இருவருக்கிடையான தனி நபர் அதிகாரப் போட்டியாக மட்டும் இதை சுருக்கிப் பார்த்து விட முடியாது. இதன் பின்னணியில் உள்ள ஆதிக்க சக்திகள் யார்? அவர்களின் நோக்கம் என்ன? என்ற புரிதல் இல்லாமல் இதை அணுக முடியாது! ஒ.பி.எஸை தூக்கி சுமப்பவர்கள் யார் என பார்க்க வேண்டும்! அதிமுக பொதுக் குழு நடத்துவது தொடர்பான வழக்குகள் நீதிமன்றங்களில் விவாதிக்கப்பட்டு வருவது பெரிய துரதிர்ஷ்டமாகும். இன்றைய தினம் உச்சநீதிமன்றம், ”ஓ.பி.எஸ் தரப்பிடம் உங்களுக்குள்ளான கருத்து வேறுபாடுகளை நீங்களே பார்த்து கொள்ளுங்கள். கட்சி விவகாரங்களில் ...
நள்ளிரவு நீதிமன்றத்தை நாடி, அதிகாலை இரண்டு மணிக்கு வழக்கு விசாரணை செய்ய வைத்து, நடக்கவுள்ள பொதுக் குழுவை அதிகாரமற்றதாக்கும் வண்ணம், அதிகாலை நான்கரை மணிக்கு தீர்ப்பு பெறப்படுகிறது என்றால், என்ன நடக்கிறது இங்கே? நீதிமன்றத் தலையீடுகளின் வழியே ஒருவரை தலைவராக நிலை நிறுத்திவிட முடியுமா? ஒ.பி.எஸ்சுக்கு பாஜகவில் எவ்வளவு செல்வாக்கு இருக்கிறது என்பதற்கு நள்ளிரவில் நீதிபதிகள் செய்த கட்டப் பஞ்சாயத்தே சாட்சியாகும்! ஒரு கட்சியின் பொதுக் குழு நடக்கிறது. பல லட்சம் தொண்டர்களின் பிரதிநிதிகளான பொதுக் குழு உறுப்பினர்கள் என்ன தீர்மானம் போடலாம், போடக் ...
பதவிச் சண்டை உச்சகட்டத்தை எட்டியுள்ளது. பொதுக் குழுவில் ஒருங்கிணைப்பாளர் பதவி பறிபோகும் என்பதை உணர்ந்த பன்னீர் அணி, கடைசி பிரம்மாஸ்த்திரமாக பொதுக் குழுவை தடுக்க கோரி காவல்துறையை நாடியுள்ளது! அதாவது, திமுக அரசின் தயவில், அதிமுக பொதுக் குழுவை தடுத்து நிறுத்தும் அளவுக்கு சென்றுவிட்டது! ”அதிமுக பொதுக் குழு நடந்தால் அதில் கலவரம் வெடிக்கும்” என பன்னீர் புகார் தருகிறார் என்றால், என்ன பொருள்? பெரும்பான்மை உறுப்பினர்களின் முடிவுக்கு எதிராக தன் ஆதரவாளர்கள் கலவரம் செய்வார்கள் என்பதற்கு அவரே ஒப்புதல் வாக்குமூலம் தருகிறார் என்று ...
அரசியலில் நல்லவர்கள் அல்ல, வல்லவர்கள் மட்டுமே வெற்றி பெற முடியும். வல்லமையை வளர்த்துக் கொண்டார் எடப்பாடி! அதே சமயம் பலவீனமானவர் என்றாலும், புறம் தள்ள முடியாதவர் பன்னீர் செல்வம்! பொதுக் குழுவில் என்ன நடக்கும்? பொதுக் குழுவிற்கு பின் அதிமுக என்னவாகும்? அதிமுகவில் ஒற்றைத் தலைமைக்கான குரல் ஓங்கி ஒலிக்கத் துவங்கியுள்ளது. ஒரு உறைக்குள் இரு கத்திகள் இருக்க முடியாது என்பது நிதர்சனம். ஒரு கத்தி மட்டுமே ஒரு உறைக்குள் போடவும், எடுக்கவும் சுலபமானது! ஒபிஎஸ், இபிஎஸ் இருவரும் சந்தர்ப்பவசத்தால் தலைவர்கள் ஆனவர்களே! சந்தர்ப்பவசத்தில் ...
தோல்விக்கான மனம் திறந்த சுய பரிசீலனைக்கு அதிமுகவில் யாரும் தயாரில்லை! அதிகார அரசியலில் முந்துகிறார் இ.பி.எஸ்! தற்காப்பு அரசியலுக்கான சண்டையில், சசிகலாவை கேடயமாக்குகிறார் ஒ.பி.எஸ். அந்தக் கேடயம் அவரை காப்பாற்றுமா? இல்லை, கதறடிக்குமா? ஒட்டுமொத்த கட்சியும் பொதுக் குழு கூட்டி சசிகலாவை கட்சியை விட்டு விலக்கியது! சசிகலாவை எதிர்த்து 90 சதவிகித மாவட்ட செயலாளர்கள் தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர். சசிகலா சேர்க்கை என பேச்செடுத்தாலே கட்சிக்குள் எத்தகையை கொந்தளிப்பையும், கோபத்தையும் சந்திக்க நேரும் என்று கூட ஒ.பி.எஸுக்கு நன்றாகத் தெரியும். ஆனபோதிலும், தேனி மாவட்ட நிர்வாகிகளை ...
பித்தலாட்டத்தின் உச்சமாக நடந்து முடிந்துள்ளது அதிமுக தலைமைக்கான தேர்தல்! தேர்தல் கமிஷன், சொந்த கட்சியினரை மட்டுமல்ல, சகலரையும் முட்டாளாக்கி உள்ளது இந்த தேர்தல்! சசிகலாவை தன் அதிகாரத்தை உறுதிபடுத்திக் கொள்வதற்கான பகடைக் காயாக்கிக் கொண்டுள்ளார் பன்னீர்! சில நிர்வாகிகள், ‘கட்சியில் தங்களுக்கு செல்வாக்கு உள்ளது. நாங்கள் இந்த பதவிக்கு போட்டியிடுகிறோம்’ என்றும் வேட்பு மனு அளித்திருந்தனர். அதன்படி முதல் நாளான 3-ந் தேதி 154 மனுக்கள் வந்திருந்தது. 2-ம் நாளான 4-ந் தேதி 98 மனுக்கள் வந்தது. இன்னும் சிலரையோ மனுப் போடவே அனுமதிக்கவில்லை! ...
ஜனநாயகம் என்பது பொது நலன் சார்ந்து ஒன்றுபட்டு செயலாற்றுவது! ஆனால், தன்நலன் ஒன்றே குறிக்கோளாகக் கொண்ட தற்குறிகளான சில சந்தர்ப்பவாதிகள் கைகோர்த்து செய்யும் சதிசெயலைத் தான் ஜனநாயகம் என்பதாக நமக்கு அறிமுகப்படுத்துகிறார்கள்! முதலில் தெரியாத்தனமாக நானும் கூட நம்பிவிட்டேன். அடடா, இதுவல்லவோ ஜனநாயகம்! அதிமுகவின் ஒருங்கிணைப்பாளரையும், துணை ஒருங்கிணைப்பாளரையும் கட்சியின் அடிப்படைத் தொண்டர்கள் தேர்ந்தெடுப்பார்களாம்! அப்படியான சட்டவிதியை தற்போது ஏற்படுத்தி உள்ளார்களாம்! பத்திரிகைகள் இது பற்றி பலவாறாக எழுதின! ”இது எடப்பாடி பழனிச்சாமியின் சர்வாதிகாரத்திற்கு வைக்கப்பட்ட செக்” என ஒரு பத்திரிகை எழுதியது. ”ஒ.பி.எஸ் ...
சசிகலாவை பற்றி கேட்டால் எடப்பாடி எஸ்கேப்..! என்ன நடந்தது..? பன்னீர் முதலில் டெல்லி கிளம்ப, அடுத்த நாள் எடப்பாடி தன் சகாக்களுடன் விழுந்தடித்து பின் தொடர என டெல்லியில் இருவருமாக பிரதமர் மோடியை சந்தித்துள்ளனர். 25 நிமிட சந்திப்பு இனிதாக இல்லை போலும்! வெளியில் வந்து நிருபர்களிடம் பேட்டியளித்த எடப்பாடியின் முகம் வெளிறி இருந்தது. குரலில் சொரத்தே இல்லை. ஏதோ தமிழ் நாட்டு நலன் தொடர்பாக விவாதித்தது போல ஏகப்பட்ட கற்பனை உரையாடல்களை சொன்னார். பக்கத்தில் இருந்த பன்னீர் செல்வத்தை பேசவே அனுமதிக்கவில்லை. சசிகலாவை ...
எப்போது வேண்டுமானாலும் வெடிக்க காத்திருக்கும் அணுகுண்டாக உள்ளது, அதிமுக! பகைமையும், மோதல்களும் பனிப் போர்வை போர்த்திக் கொண்டுள்ளன! கையில் இருக்கும் கத்தியை முதுகுக்குப் பின் மறைத்துக் கொண்டே, மற்றொரு கையால் இருவரும் கைகுலுக்கிக் கொண்டிருக்கிறார்கள்! ‘’இவர்கள் உண்மையாகவே மோதமாட்டார்களா..? இதைச் சாக்காக வைத்து அதிமுகவிற்கு தலைமை தாங்கும் காலம் கனியாதா?’’ என்ற சசிகலாவின் எதிர்பார்பு நிறைவேறுமா..? ‘’இ.பி.எஸ் பலம் பெற்று வருகிறார்! அவர் ஒ.பி.எஸ் ஆட்களை ஓரம் கட்டுகிறார்.’’ ‘’ஒ.பி.எஸ்சின் அதிகாரம் குறைந்து கொண்டே போகிறது! ஒ.பிஎஸ்சையே காலப் போக்கில் காலியாக்கிவிடுவார் பழனிச்சாமி!’’ ‘’ஐயோ..பாவம் ...