க.அமுதன், சுசீந்திரம், கன்னியாகுமரி ”அதிமுக அரசின் ஊழல்களை விசாரிக்க விசாரணை கமிஷன் அமைக்கப்படும்” என முதலமைச்சர் ஸ்டாலின் கூறி இருக்கிறாரே.? இதற்கெல்லாம் புளகாங்கிதப்படும் மனநிலையை மக்கள் கடந்துவிட்டனர். சென்னை புளியந்தோப்பு கே.பி.பார்க் அடுக்குமாடி குடியிருப்புகள் எப்போது இடிந்துவிழுமோ என்ற நிலையில் சென்ற ஆட்சியாளர்களால் கட்டப்பட்டு உள்ளது. தொட்டாலே சிமெண்ட் பூச்சுகள் பெயர்ந்துவிழுந்ததை யாவரும்பார்த்தோம். அண்ணா பல்கலை கழகம் மற்றும் ஐ.ஐ.டி நிபுணர்கள் ஆய்வு செய்து அறிக்கை தந்தவுடன் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை பாயும் என்றார்கள். என்ன ஆச்சு? அவர்கள் தந்த விசாரணை அறிக்கையே வெளியிடபடாமல் ...