எதிர்கால சமுதாயமான மாணவர்களுக்கு வழிகாட்ட வேண்டிய கலங்கரை விளக்கங்களாக இருக்க வேண்டிய ஆசிரியர்கள் ஒரு சிலரின் தவறான நடவடிக்கைகளால் ஆசிரியர் என்று மகத்தான சேவைத் தொழிலில் கறை படிய தொடங்கியுள்ளது. அனைத்து பணிகளிலும் உள்ளது போல ஆசிரியர் சமுதாயத்திலும் ஒருசில கரும்புள்ளிகள் உள்ளன. இப்படிப்பட்டவர்களின் செய்கைக்காக ஒட்டுமொத்த ஆசிரியர் சமுதாயத்தையும் குறைகூறி மட்டம் தட்டி விட முடியாது. ஆசிரியர் பணியை தவம் போல் செய்கின்ற எண்ணற்ற பல ஆசிரியர்கள் இருக்கும்பொழுது இதுபோல ஒரு சிலரின் தவறுகளால் ஒட்டுமொத்த ஆசிரிய சமுதாயத்திற்கும் அவப்பெயர் ஏற்பட்டு விடுகின்றது. ...
அதீத பணபலம், அதிகார பலம் தரும் தைரியத்தில் பாஜகவினர் அளப்பரிய குற்றங்களை அஞ்சாமல் செய்யும் துணிச்சல் பெற்றுவிடுகின்றனர். பாஜகவில் பாலியல் எக்ஸ்பிளாய்டேசன் அதிகமாக நடப்பது தொடர் செய்தியாக இருந்தன! பெண்கள் பாதுகாப்பாகவோ, கண்ணியமாகவோ இயங்க முடியாது என்றால் அது என்ன கட்சி? அது என்னவிதமான கலாச்சாரம்..? இது ஏதோ கே.டி.ராகவன் சம்பந்தப்பட்ட விவகாரம் மட்டுமல்ல, பாஜகவில் பெண்கள் நிலை குறித்த வெளிப்படையான விசாரணை கோரும் ஒரு விவகாரமாகும்! பாரதிய ஜனதா கட்சியின் தமிழக பொறுப்பாளர் சி.டி.ரவியே கட்சியின் மாநில தலைமையகமான கமலாலயத்திலேயே ஒரு விசாகா ...
அடிமாட்டுக் கூலி, அடிப்படை வசதிகளற்ற அவலம், கூடுதல் வேலை,இரக்கமற்ற சுரண்டல், கேட்க நாதியற்ற துயரம், சட்டப் பாதுகாப்பின்மை…இந்தச் சூழல்களுக்கு இடையில் தான் புலம்பெயர் தொழிலாளர்கள் நம்மிடையே கவனிபாரற்று வாழ்ந்து வருகின்றனர். சர்வதேச புலம் பெயர்ந்தோர் நாளான இன்று அவர்கள் படும் பாடுகளை சற்றே பார்ப்போமா…? “கோயமுத்தூரில் உள்ள மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகம் புதிதாக கட்டப்பட்டது. இதன் கட்டுமானத்தில் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் பெருமளவில் ஈடுபடுத்தப்பட்டனர். அவர்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட ஊதியத்தைவிட குறைவாகவே வழங்கப்பட்டது. மாவட்ட ஆட்சித்தலைவரின் கண்முண்ணே நடைபெறும் விதிமீறலை அவர் கண்டுகொள்ளவில்லை. பீகாரில் இருந்தும், ஒரிசாவில் ...
சமீபகாலமாக காடுகளும்,பழங்குடிகளும் அங்கு அத்துமீறி ஊடுருவிய நகரவாழ்மக்களால் சுரண்டப்படுகின்ற அவலத்தையும்,அங்குள்ள வளங்கள் சூறையாடப்பட்டு,அவர்கள் நகரமக்களின் வாழ்வியல் தேவைக்கேற்ப ஆட்டிவைக்கப்படுவதுமான மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. பல ஆண்டுகளாக காடுகளில் சுற்றி அலைந்து,பழங்குடிகளின் வாழ்க்கை பிரச்சினைகளை எழுதி வரும் பத்திரிகையாளர் சிவ சுப்பிரமணியன் அறம் இதழுக்காக ஜா.செழியனுக்கு தந்த நேர்காணல். அடிப்படையில் இந்த பூமி காடு,மலைகள் சூழ்ந்ததாகவே இருந்தது. காட்டைப் பண்படுத்தி விவசாய பூமியாக்கினான் மனிதன். காலப்போக்கில் காடு,மலையை விட்டு மனிதன் விலகி வந்து தனக்கான வாழும் பகுதியை உருவாக்கி கொண்டான். அவற்றை நகரம் என்றழைக்கிறோம் . அங்கு வாழ்பவன் அறிவு ...