உத்திரபிரதேசத்தில் தலித்துகளுக்கான பகுஜன் சமாஜ் கட்சி சமீபகாலமாக பார்ப்பனர் நலன் சார்ந்து தீவிரமாக செயல்பட்டது! ‘இது பகுஜன் சமாஜா? பார்ப்பன சமாஜா?’ என்ற அளவுக்கு விமர்சிக்கப்பட்டது. சமீபத்திய தேர்தலில் அந்தக் கட்சியின் படுமோசமான வீழ்ச்சிக்கு இது காரணமா? பகுஜன் சமாஜ் கட்சியின் ஒரே தலைவியான மாயாவதி விஸ்வரூபமெடுத்த போது, அவர் உ.பிக்கு மட்டுமல்ல, இந்திய தலித்துகளுக்கே தலைமை தாங்கி பெருந்தலைவராவார் என்ற எதிர்பார்ப்புகள்  நிலவியது. ஆனால், ”இப்படியாக இந்திய தலித்துகளின் தாயாக வந்திருக்க வேண்டிய அவரோ, காலப் போக்கில் கால்மாறிப் பயணித்து பார்ப்பனப் பாசத்தில் ...

வேல்முருகன், சுங்குவார் சத்திரம், காஞ்சிபுரம் உக்ரைன் விவகாரத்தில் பெரும்பாலான அமெரிக்க ஆதரவு பார்வையில் பத்திரிகைகள் ரஷ்யாவை சாடுகின்றன. நீங்கள் அமெரிக்கா பக்கமா? ரஷ்யா பக்கமா? உக்ரைனுக்கு நீண்ட கால நோக்கில் எது நல்லது, பாதுகாப்பானது என பார்க்க வேண்டும். இந்த கண்ணோட்டத்தில் உக்ரைன் இப் பிரச்சினையை கையாண்டிருந்தால் ரஷ்யா அத்துமீறி இருக்காது. அமெரிக்க,ஐக்கிய நாடுகள் வலையை ஒரு சாக்காக வைத்துக் கொண்டு ரஷ்யாவிடம் பேரம் பேசி உக்ரைன் நலன்களை பேணி இருக்க வேண்டும். இது அண்ணன் தம்பி சண்டை! விரைவில் இருவரும் கைகோர்க்கவும் வாய்ப்புண்டு! ...