வீரம் செறிந்த விவசாயிகள் போராட்டம் கடந்து வந்த பாதை, உள்ளூர் அளவிலும்,உலக அளவிலும் அது ஏற்படுத்திய அதிர்வுகள், தாக்கங்கள்!  மோடியின் அதிரடி வாபஸ் அறிவிப்பு நம்ப வைத்து கழுத்தறுக்கும் தந்திரமா..? ஆகிய சந்தேகங்கள் பற்றியெல்லாம் அகில இந்திய விவசாயிகள் போராட்ட குழுவின் தமிழக ஒருங்கிணைப்பாளர் கே.பாலகிருஷ்ணன் நேர்காணல். தமிழ்நாட்டில், 60 க்கும் மேற்பட்ட விவசாயச்  சங்கங்கள் ஒன்றிணைந்து, ‘ஐக்கிய விவசாயிகள் முன்னணி’ என்ற அமைப்பு உருவாகியுள்ளது. அதன் ஒருங்கிணைப்பாளராக, கடந்த ஓராண்டு காலமாக  போராட்டத்தை வழிநடத்தி வருபவர்   கே.பாலகிருஷ்ணன்.  பிரதமரின் திடீர் அறிவிப்புக்கான  காரணம்,  ...

உலகத்தில் எத்தனையோ நதி நீர் பிரச்சினைகள் சுமூகமாக தீர்க்கப்பட்டுள்ளன! ஏன் வட இந்தியாவிலேயே கூட பல மாநிலங்களுக்கு இடையில் பாயும் ஆற்று நீர் பகிர்வு சுமூகமாக முடிவடைந்துள்ளது. பக்ரா நங்கல் பயஸ் மேலாண்மை வாரியம் இதற்கு ஒரு உதாரணம்! ஆனால், காவிரி நீர் பங்கீட்டை மட்டும் ஏன் சுமூகமாக தீர்க்க முடியவில்லை…? இத்தனைக்கும் கடந்த 50 ஆண்டுகளில் காவிரியில் நாம் பெற்று வந்த தண்ணீரின் அளவு படிப்படியாக குறைக்கப்பட்டுள்ளது. பல்வேறு கட்ட சட்டப் போராட்டங்களால் தமிழகம் காலம்காலமாக பெற்று வந்த காவிரி தண்ணீரை காப்பாற்றிக் ...

நாடெங்கும் விவசாயிகள் போராட்டங்கள் நடத்திவிட்டனர். டெல்லியில் வரலாறு காணாத அளவில் ஒரு நீண்ட நெடிய உழவர் போராட்டம் உறுதி குலையாமல் நடத்தப்பட்டு வருகிறது. பஞ்சாப், ராஜஸ்தான், சட்டிஸ்கர், மேற்குவங்கம், கேரளா, ஜார்கண்ட், பாண்டிச்சேரி, டெல்லி ஆகிய மாநில சட்டசபையில் ஏற்கனவே இதை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுவிட்டது! பாஜகவின் கூட்டணிக் கட்சியான சிரோன்மணி அகாளிதளம் கட்சி மத்திய அமைச்சர் பதவியைத் துறந்து கூட்டணியில் இருந்தே இந்த மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக விலகிவிட்டது. இதை தொடர்ந்து தற்போது தமிழக சட்டசபையிலும் விவசாயிகளுக்கு ஆதரவாக தீர்மானம் நிறைவேறியுள்ளது. ...

ஜூலை 26ஆம் தேதியுடன் ஏழு மாதங்களை நிறைவு செய்கிறது, மூன்று வேளாண் விரோத சட்டங்களுக்கு எதிராகவும், குறைந்தபட்ச ஆதார விலைக்குச் சட்ட அங்கீகாரம் கோரியும்,டெல்லி நகரில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் விவசாயிகள் போராட்டம்! யாருக்கும் தெரியாமல் ஊரடங்கிய நேரத்தில் 2020 ஜூன் 6ஆம் தேதி, மூன்று  அவசரச் சட்டங்களாகப் கொண்டுவரப்பட்டு,செப்டம்பர் 3வது வாரத்தில்,அனைத்து சனநாயக விதிகளையும், மரபுகளையும் காற்றில் பறக்கவிட்டு, நாடாளுமன்றத்தில் சட்டங்களாக இவை நிறைவேற்றப்பட்டன. இவ்வாறு அவசர அவசரமாக கொண்டுவருவதால் பெரியளவிற்கு எதிர்ப்பு  இருக்காது,அப்படியே இருந்தாலும் சமாளித்து விடலாம்’ என்ற மூடநம்பிக்கையில் ஒன்றிய அரசு,முன் யோசனையில்லாமல் ...