வேளாண் சட்டங்கள் வாபஸ் வாங்கப்பட்டதாக மோடி வெளியிட்ட அறிக்கையைப் பார்த்தால், அது தன் தவறுகளை உணர்ந்தோ, மனம் மாறியோ அல்லது விவசாயிகளின் போராட்டத்தில் உள்ள நியாயங்களைக் கருதியோ அந்த அறிக்கை வெளியிடப்படவில்லை என எவருமே உணரலாம்! அந்த அறிக்கை இப்படிச் சொல்கிறது; நாட்டு நலனுக்காக வேளாண் துறையில் பல்வேறு சீர்திருத்தம் கொண்டு வந்தோம். விவசாயிகளின் நலனுக்காக புதிய வேளாண் சட்டங்களை கொண்டு வந்துள்ளோம். சிறு விவசாயிகளை முன்னேற்றவே அவர்களுக்கு அதிகாரம் அளிக்கவே இந்த சட்டங்கள் கொண்டு வந்துள்ளோம். அனைத்து விவசாயிகள் சங்கத்தினருடன் ஆலோசித்த பிறகே ...