எல்லா துறைகளிலும் ஜனநாயக காற்று வீசுவதற்காக ஏற்படுத்தப்பட்டிருந்த கதவுகளை யெல்லாம் அடைத்து வருகிறது பாஜக அரசு! சமகால சமூக அரசியல் பிரச்சினைகளை சினிமாக்கள் பேச ஆரம்பித்திருப்பது பாஜக அரசை பதை,பதைக்க வைத்துள்ளது. எனவே, சென்சார் போர்டுகளில் எல்லாம் கட்சி ஆட்களைப் போட்டு கடும் நிர்பந்தம் தந்து வருகிறது. அதை எதிர்த்து டிரிபூனல் போய் போராடி மீட்டு வரும் வாய்ப்பை தற்போது காலியாக்கிவிட்டது. திரைப்படச் சான்றிதழ் மேல் முறையீட்டு தீர்ப்பாயத்தை (Film Certification Appellate Tribunal) மத்திய அரசு கலைத்து விட்டது. தணிக்கை வாரியம் திரைப்படங்களுக்கு ...