வன்முறைக்கு அஞ்சாத மனோபாவம்! பஞ்சமா பாதகமென்றாலும்,பயப்படாமல் செய்யும் துணிச்சல்! தெருச் சண்டைக்கு முஸ்தீபு காட்டும் அஞ்சா நெஞ்சம்! திராவிட இயக்கங்களின் மீதான தீராத வன்மம்! இந்த தகுதிகள் போதாதா தமிழக பாஜக தலைவராக அண்ணமலை தேர்ந்தெடுக்கப்படுவதற்கு? ஆக, இதைத் தான் ஆகப் பெரிய தகுதியாக பார்க்கிறது பாஜகவின் தேசியத் தலைமை! தமிழக பாஜக தலைவராக அண்ணாமலை நியமிக்கப்பட்டது என்பது பாஜகவின் விரக்தி மன நிலையின் விளைவுக்கு ஒரு அத்தாட்சியாகும்! எதையாவது செய்தாக வேண்டும் என்ற தவிப்பில் எல்.முருகன் என்ற தலித்தை கட்சித் தலைவராக்கி அதன் ...