உண்மைகளை ஊனப்படுத்தி, பொய்களைக் கொண்டு ஊர்வலம் நடத்துகிறது காஷ்மீர் பைல்ஸ்! இந்தப் படத்தை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்ற புரிதல் நமக்கு வேண்டும்.காஷ்மீர் தொடர்பான உண்மைகளை நாம் வெளிப்படுத்த வேண்டும். காஷ்மீர் பண்டிட்களை தொடர்ந்து அகதிகளாக வைத்து பாஜக அரசியல் செய்வதை அம்பலப்படுத்த வேண்டும். ‘பெரியார், அம்பேத்கர், மார்க்ஸ் சிந்தனைக் களம்’, என்ற கோவையைச் சார்ந்த அமைப்பு, ‘காஷ்மீர் பைல்ஸ்’ திரைப்படம் குறித்த கருத்தரங்கை நடத்தியது. இதில் இலக்கியவாதியும், அரபு நாடுகளின் அரசியலை கூர்ந்து பார்ப்பவருமான இரா. முருகவேள், உரையாடினார். இசுலாமியர்களுக்கும், பெருந்தன்மையான பொதுச் ...
காஷ்மீர் மண்ணில் இந்து பண்டிட்களின் கண்ணீரும், ரத்தமும் மட்டுமா உறைந்திருக்கிறது! அதே அளவுக்கு இஸ்லாமியர்களின் இழப்புகளும் உண்டே! இந்த இருதரப்புக்குமான இணக்கத்தை சீர்குலைத்த கூட்டமே இந்த படத்தையும் எடுத்துள்ளது! அரைகுறை உண்மைகளைச் சொல்லி இஸ்லாமிய துவேஷத்தை பரப்புகிறது! அரைகுறை உண்மைகளையும் , ஆதாரமற்ற புனைவுகளையும் ஒருதலைபட்சமான காட்சி படிமங்களாக்கி ’முஸ்லீம் வெறுப்பு’ என்ற குரூர நோக்கத்திற்காக நேர்த்தியாக எடுக்கப்பட்ட படம் காஷ்மீர் பைல்ஸ்! அதில் வெற்றியும் பெற்றுள்ளது. கலைத் திறமையும், நவீன சினிமா தொழில் நுட்பங்களும் கைகோர்த்து இந்துத்துவ நோக்கத்தை நிறைவு செய்கின்றன! காஷ்மீர் ...