முதுகெலும்புள்ள – சுய அறிவுள்ள –  ஒரு நிதி அமைச்சர் தமிழகத்திற்கு கிடைத்துள்ளார் என நினைத்து சந்தோஷப்பட்டேன். பி.டி.ஆர்.பழனிவேல்ராஜனின் இந்த சுயமரியாதையையும், சுய அடையாளத்தையும் மீட்டெடுக்கும் நிதிநிலை அறிக்கை தயாரிப்புக்கு முதல் நன்றியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு தெரியப்படுத்தி விடுகிறேன். ஏனென்றால் ஒரு பொலிடிகல் வில் பவர் இல்லாமல் இந்த நிதி நிலை அறிக்கைக்கு முதல்வர் ஒத்துழைப்பும், உறு துணையும் தந்திருக்க முடியாது! நிதிநிலை அறிக்கை குறித்து விரிவாக வியாக்கியானம் செய்ய விரும்பவில்லை! முக்கிய அம்சங்களை மட்டும் கவனப்படுத்துகிறேன். ஒரு மாநில அரசு சிறபாக செயல்படுவதற்கு ...

மகிழ்ச்சி, வெள்ளை அறிக்கையின் மூலம் ஒரு விவாதத்தை, விழிப்புணர்வை விதைத்தற்கு! பி.டி.ஆர்.தியாகராஜனின் வெளிப்படைத் தன்மைக்கு ஒரு சல்யூட்! ஐயோ..இவ்வளவு கடனா..? இவ்வளவு நெருக்கடிகளா..என வியக்கும் போது, இந்த விபரீதங்களுக்கு வித்திட்டது யார்..? அதிமுக மட்டுமே அத்தனைக்கும் பொறுப்பாகுமா..? ஒரு வகையில் வெள்ளை அறிக்கை மூலம் தன்னை வெளிப்படைத் தன்மைக்கு இந்த அரசு தயார்படுத்திக் கொண்டுள்ளது என்ற வகையில் மகிழ்ச்சியே! சென்ற ஆட்சியாளர்களின் தவறுகளை சொல்வதன் மூலம் தாங்களும் அதே பாதையில் பயணிக்க நேர்ந்தால் கேள்விக்கு உள்ளோவோம் என இவர்கள் உணர்ந்திருப்பார்கள் தானே! தமிழக நிதிஅமைச்சர் ...

’’இன்சூரன்ஸ் பண்றீங்களா சார்…” என்று யாராவது கேட்டால் உஷாராகிவிடுங்கள்!  இன்றைக்குப் பல இன்சூரன்ஸ்கள் தேவையற்றது. கட்டுபவர்களைவிட நடத்தும் முதலாளிகளின் லாபத்தைக் குறிக்கோளாகக் கொண்டது.இதைப் படித்தால் இன்சூரன்ஸ் விஷயத்தில் உங்களுக்கு ஏமாற்றம் இருக்காது.  இன்சூரன்ஸ் என்று சொன்னால் முதலில் நினைவுக்கு வருவது எல்.ஐ.சி ஆகும். இவை மத்திய அரசு நிறுவனமாகும். பல வருடங்கள் இந்தியாவின் மிகச்  சிறந்த நிறுவனமாகத் தனித்து செயல்பட்டுவந்தது. ஆனால், எல்.ஐ.சியை இருக்க 2000வது ஆண்டில்  தனியார் இன்சூரன்ஸ்  நிறுவனங்கள் தொடங்கினார்கள். அன்று தொடங்கிப் பல ஆபத்துகளை  இன்சூரன்ஸ்துறை சந்திக்கிறது!  இன்று எல்.ஐ.சிக்கு போட்டியாக 24 தனியார் ...