கமலா ஹாரிஸை எப்படி புரிந்து கொள்வது?   ”கருப்பினப் பெண்ணான என்னை இப்பொறுப்பிற்குத் தேர்வு செய்துள்ள அமெரிக்கா மக்கள் அனைவருக்கும் நன்றி” என்கிறார் கமலா ஹாரிஸ். “ஆப்பிரிக்க, ஆசிய அமெரிக்கப் பெண்ணொருவர் முதன் முறையாகத் தேர்வு செய்யப்பட்டார்” என்கிறது ஊடகங்கள். இந்தியப் பெண்மணி துணை அதிபராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளதில் இந்தியா மகிழ்கிறது. தமிழ்ப்பெண் தேர்வு எனத் தமிழகம் கொண்டாடுகிறது. பிராமணப் பெண் அமெரிக்காத் துணை அதிபராகி விட்டார் எனத் தமிழக பிராமணர்கள் மகிழ்கிறார்கள். இனவெறி ஆணவத்தின் இருமுகங்களில் ஒன்றாகப் பார்க்கப்பட்ட ட்ரம்பின் தோல்வியில் மனம் சோர்ந்த ...