மழைவெள்ளம் சூழ்ந்திருக்கிறதா? பதற வேண்டாம், பணம் வேண்டாம்! யார் தயவும் தேவையில்லை! வரமாக வந்த மழையை வறண்டு கிடக்கும் நிலத்தடிக்குள் இதோ இந்த எளிய முறையை பின்பற்றி , அனுப்புங்கள்! வெள்ளத்தில் இருந்து உடனே விடுதலை! தொடர் மழை தமிழகம் முழுக்க சக்கை போடுபோட்டவண்ணம் உள்ளது! மழைவெள்ளத்தால் தண்ணீர் தேங்கி உள்ளதால் குடியிருப்புகளும், வணிக வளாகங்களும், உற்பத்திக் கூடங்களும் தண்ணீரை வெளியேற்ற பகீரதப் பிரயத்தனம் செய்த வண்ணம் உள்ளனர்.முடிந்த வரை அரசு துரிதகதியில் இறங்கி நீரை வெளியேற்றினாலும் பல இடங்களில் அரசு உதவியை எதிர்பார்த்து ...

2015 தின் சோக காட்சிகள் இந்த ஆண்டும் அரங்கேறுவதற்கான சாத்தியகூறுகள் இருந்த போதிலும், ஆட்சி மாற்றத்தினால் கொஞ்சம் தப்பித்தோம் என்று தான் சொல்ல வேண்டும்! பல ஆயிரம் கோடிகள் மழை நீர் வடிகால் பணிகளுக்கு செலவழிக்கப்பட்டுள்ளன. அவை போதுமான பலன்களை தராமல் வீடுகளுக்குள் வெள்ளம் போனதன் காரணம் என்ன..? இன்றைய ஆட்சியாளர்கள் பேரழிவுகளை தவிர்க்க ஆனமட்டும் முயற்சிக்கிறார்கள் என்பதை உணர முடிகிறது. முதல்வரும், அதிகாரிகளும் களத்தில் இறங்கி வேலை செய்கின்றனர். இப்போதே நிலைமை இப்படி உள்ளது. இன்னும் நான்கைந்து நாட்களை எப்படி எதிர்கொள்ளப் போகிறோம் ...