எம்.ஆதித்யா, பனைமரத்துப்பட்டி, சேலம் ”ரபேல் போர் விமானங்கள் வாங்கப்பட்டதில் காங்கிரஸ் ஆட்சி காலத்திலேயே இடைத்தரகர் சூசேன்குப்தாவிற்கு ரூ65 கோடி தரப்பட்டுள்ளது பற்றி ராகுல் பதில் சொல்ல வேண்டும்” என்கிறதே பாஜக? இதைக் கண்டுபிடிக்க ஏழு ஆண்டுகளா..? இதைத் தெரிந்து கொள்ளாமல் தான் ஒப்பந்தம் போடப்பட்டு 36 விமானங்கள் வாங்கபட்டதா? இந்த அளவுக்குத் தான் நிர்வாகத் திறமையா..? தவறு நடந்திருக்கிறதென்றால், தண்டிக்க வேண்டியவர்களே நீங்கள் தானே? சம்பந்தப்பட்டவர்களை எப்போது உள்ளே தள்ளப் போகிறார்கள் மோடியும், அமித்ஷாவும்! விவகாரத்தை திசை திருப்பாமல் பதில் சொல்லட்டும். காங்கிரஸ் ஆட்சியில் ...