ஓரே ஓரு காரியத்தால் இந்திய மக்களின் 90 % மான நோய்களுக்கு முற்றுபுள்ளி வைத்து மக்களின் ஓட்டுமொத்தஆரோக்கியத்தையும்மீட்டெடுத்துவிடமுடியும்! அது நம் பாரம்பரிய எண்ணெய் பண்பாட்டை மீட்டெடுப்பது தான்! நான் கேட்டரிங் தொழிலை தேர்ந்தெடுத்ததன் நோக்கமே நம் பாரம்பரிய உணவு கலாச்சாரத்தை மீட்டெடுப்பது தான்! ’’சாவித்திரி கண்ணா, இந்த செக்கு எண்ணெய்,தூய பசு நெய்,இயற்கை வேளாண்மையில் விளைந்த அரிசி,சிறுதானியங்கள் இதை கொண்டு மட்டும் தான் சமையல்தொழில்செய்வேன்என்றால்கட்டுபடியாகாது. ரீபைண்ட் ஆயில்,டால்டாவைக் காட்டிலும் இவை மூன்று மடங்கு விலை அதிகம்! சமாளிக்க முடியாது’’என்று எல்லோரும் அறிவுரை செய்தனர். ஆனால், ...