இயற்கையாகவே நோய் எதிர்ப்புத் திறன் உள்ள சிறார்களுக்கு கொரோனா அச்சுறுத்தல் அறவே இல்லை. வலிந்து தடுப்பூசியை திணிப்பது நீண்டகால நோக்கில் பல பாதகமான விளைவுகளை தரும் என சர்வதேச அளவில் புகழ்பெற்ற மருத்துவ நிபுணர்கள் எதிர்க்கிறார்கள்! அதையும் மீறி ஏன் இந்த திணிப்பு? கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தின் முதல் வாரத்தில் இந்தியாவில் கொரோனா பூஸ்டர் தடுப்பூசி அவசியமா என்பது குறித்தும், குழந்தைகளுக்கான தடுப்பூசி குறித்தும் தேசிய நோய் பரவல் தடுப்பு வல்லுநர் குழு ஆலோசனை மேற்கொண்டது. இரண்டு மணி நேரம் நடைபெற்ற ஆலோசனையில் ...
சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதியரசர் திரு. சஞ்சீப் பானர்ஜீ மேகாலயா உயர்நீதி மன்றத்திற்கு ” நீதி பரிபாலனத்தை செவ்வன செய்யும் பொருட்டு” (better administration of justice) மாற்றப்படுகிறார் என்பது செய்தி. இச்செய்தி அனைவரையும் துணுக்கிட வைத்தது. காரணம் திடுதிப்பென்று இத்தகைய மாறுதலுக்கான காரணம் என்ன என்று எல்லோரும் மண்டையை பிய்த்துக் கொண்டாலும் விவரம் அறிந்தவர்கள், ”இம்மாறுதல் ஒருவகையில் எதிர்பார்த்த ஒன்றுதான் , ஏனெனில், பானர்ஜீ தன்னிச்சையாய் நடக்க கூடியவர், அதிகார மையங்களுக்கு வளைந்து கொடுக்காதவர், உண்மை மற்றும் சட்ட ஆதாரங்கள் அடிப்படையில் வழக்கை ...
அறம் இணைய இதழ் தொடங்கி ஓராண்டு நிறைவு பெற்றுள்ளது! இரண்டாம் ஆண்டில் நடை போட தொடங்கியுள்ளது. உண்மையை உரக்கச் சொல்லும் இந்த ஊடகப் பயணம் வெற்றி பெற உளமார வாழ்த்துகிறேன். சமூகத்தின் பல்வேறு வெளிப்பாட்டுத் தளங்களாம் அரசியல் முதல் ஆன்மீகம் வரை, வயல் வெளி முதல் வணிகத் தளம் வரை, போராட்டக் களம் முதல் பொழுதுபோக்குத் துறை வரை தொடர்பான உண்மைகளை ஓங்கிச் சொல்லுவது ஊடகத்தின் ஒப்பிலாப் பணி. இந்த கருத்துப் பணியை கச்சிதமாகச் செய்கிறது அறம். அத்துமீறுகிற அதிகார வர்க்கத்திற்கு ஒத்துப்போவது, அதனை ...