யானைகளை யாருக்குத் தான் பிடிக்காது. அதன் கம்பீரத்தை பார்க்கும் போதே ஏதோ ஒரு உற்சாக ஊற்று நமக்குள் தோன்றுகிறது! அது நடக்கும் நடையழகோ வித்தியாசமானது. அதன் மிகச் சிறிய கண்கள், பெரிய காதுகள், நீண்ட தும்பிக்கை..யாவும் பரவசம் தரக் கூடியவை! வருகிற செப்டம்பர் 10 ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி. யானை முகம் கொண்ட கடவுளை ஆண்டு தோறும் வழிபடும் நாம் யானையை பாதுகாப்பதில் எவ்விதமான அக்கறையை கொண்டிருக்கிறோம்…? ஒரு பக்கம் யானையின் தலைதான் கடவுள். மற்றொரு பக்கம் உயிருள்ள அதே யானையை பிச்சை ...
தமிழகத்தில் அரசு பழங்குடிகளையும், காடுகளையும் கையாளும் முறை மிக மோசமாக உள்ளது. கல்வி,பொருளாதாரம்,சூழலியல் பாதுகாப்பு,அடிப்படைத் தேவைகளுக்கான ரேஷன் பொருள்கள் பெறுவது, ஓட்டுப் போடுவது என எல்லாவற்றிலும் தமிழக பழங்குடிகள் சந்திக்கும் பிரச்சினைகளை சொல்கிறார் சிவ சுப்பிரமணியன். பழங்குடிகளே காடுகளைப் பாதுகாக்க முடியும் வனத்துறை வேலைக்குக் கேரளா, கர்நாடகா அரசுகள் 60 சதவிகிதம் அந்த மாநில பழங்குடிகளையே நியமனம் செய்கின்றன.. ஆனால் தமிழ்நாடு அந்த காடுகளை பற்றி அனுபவமே இல்லாத நபர்களை நியமிக்கிறார்கள். நகர்புரத்தில் இருப்பவருக்குக் காட்டிற்குள் வேலை கொடுக்கிறார்கள்.அவரால் காட்டிற்குள் என்ன வேலை செய்ய முடியும்? காடு,விலங்குகள் பற்றிய எந்த வித அனுபவமும் இல்லாத, ...
விலங்குகளால் மனிதன் இறப்பதை விட, மனிதனால் காட்டு விலங்குகள் இறப்பது நூறு மடங்கு அதிகம்..! புலால் உண்ணும் விலங்குகள் பொதுவாக மனிதனைக் கொல்வதில்லை என்பது ஆச்சரியமாகத் தெரிந்தாலும்,அதுவே முற்றிலும் உண்மையாகும். மனிதன்-விலங்கு மோதல் சூழல் எப்படி ஏற்படுகிறது என்பதை விரிவாகப் பார்ப்போம்..! இயற்கையாக விலங்குகளுக்கு மனிதன் இரை கிடையாது. சட்டப்படி மனிதனுக்கும் காட்டு விலங்குகள் உணவு கிடையாது. இப்படியிருக்க விலங்குகள் ஏன் மனிதனைக் கொல்கின்றன…? சிறுத்தை ஒன்று லாரி ஓட்டுனரை அதிகாலை கொன்றது, புலி மனிதனை அடித்திழுத்துச் சென்றது,யானை வன ஊழியரைத் தாக்கியது என்று பத்திரிகையில் அவ்வப்பொழுது செய்திகள் வரும். ...