எப்படியாவது வெற்றி பெற்றால் போதும் பிறகு பார்த்துக்கலாம் என்ற தவிப்பு ஒவ்வொரு இலவச அறிவிப்பிலும் பிரதிபலிக்கிறது. தேர்தல் தோல்வி  பயத்தின் உச்சம் அதிமுக தேர்தல் அறிக்கையில் பட்டவர்த்தனமாகத் தெரிகிறது! தமிழக அரசின் வருமானத்திற்கும் அதிகமான செலவாகக் கூடிய இலவசங்களை அறிவித்த ஒரே கட்சி என்ற சிறப்பு வரலாற்றில் அதிமுகவிற்கு நிலைக்கும்! உலகின் மிகப் பெரிய கடனாளி நாடாக தமிழகத்தை மாற்றி காட்டுகிறோம் என்பதை உங்கள் அறிக்கை சொல்லாமல் சொல்கிறதே..! அதிமுக தேர்தல் அறிக்கை குறித்த ஒரு அசத்தலான அலசல்; அப்பப்பா அடுக்க முடியவில்லை! முக்கியமானவற்றை ...

”குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் தருகிறேன்’- ஸ்டாலின். ”அப்படியானால் நான் 1,500 உடன் ஆறு காஸ் சிலிண்டர்கள் தருகிறேன்’’- எடப்பாடி பழனிச்சாமி. இப்படி இன்னும் என்னென்னவெல்லாம் தரப்போகிறீர்கள்….? இலவச அறிவிப்புகள் அந்தந்த அரசியல் கட்சிகளின் தன் நம்பிக்கையின்மையை வெளிப்படுத்துகிறது! நாம் நிராகரிக்கப்பட்டுவிடலாகாது என்ற பயத்தைக் காட்டுகிறது. மக்கள் நம்பிக்கையை பெறுவதற்கு வேறு எந்த தகுதியும் அவர்களிடம் இல்லாததைக் காட்டுகிறது! தமிழ் நாட்டின் கடன்சுமை ஏற்கனவே ஐந்தரை லட்சம் கோடிகளாய் உள்ள நிலையில், அதற்கான வட்டியே அரசின் மொத்த வருமானத்தில் கணிசமான பங்கை களவாடும் நேரத்தில், ...