சசிகலாவின் வருகை எடப்பாடியின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கிவிட்டது! சசிகலா ஒன்றும் மக்கள் தலைவியல்ல! தியாகியல்ல, நிர்வாகியுமல்ல! ஆயினும் நான்காண்டுகள் குற்ற வழக்கில் சிறையில் இருந்து வரும் ஒருவரால் தமிழக அரசியல் அதகளப்படவுள்ளது! அதிமுகவின் ரிங்மாஸ்டராக அறியப்பட்ட சசிகலா, அங்கீகரிக்க மாட்டார் எடப்பாடியின் முதல்வர் அதிகார மோகத்தை! இதனால் தற்போது பதற்றத்தோடு டெல்லி சென்று காய் நகர்த்துகிறார் எடப்பாடி! அ.திமுகவினரை அடிமைகளாகவும், அதிகாரப் பற்றுள்ள சுயநலவாதிகளாகவும் மட்டுமே எம்.ஜி.ஆரும்,ஜெயலலிதாவும் வளர்த்து ஆளாக்கியுள்ளனர் என்ற வகையில் இன்று சசிகலாவை முழுவீச்சில் எதிர்பதற்கான ஆற்றல் எவருக்காவது இருக்குமா என்பது கேள்விக்குறியே! ...