கொஞ்சம் கூட கூச்ச, நாச்சமில்லாமல் ஒரு நீதிபதியே குற்றவாளியின் வழக்கறிஞராக மாறிப் பேசிய நிகழ்வு இன்று தமிழக நீதிமன்ற வரலாற்றில் நிகழ்ந்துள்ளது. இதற்கு முன்பு சங்காராச்சாரியார் வழக்கிலும் தன் சார்பு நிலையை பட்டவர்த்தனமாக வெளிப்படுத்தினார் இதே நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன்! நேர்மையான விமர்சனங்கள், மாற்றுக் கருத்துகளுக்கே இடமின்றி தடாலடியாக அவதூறு பரப்புவதும், மததுவேஷ கருத்துக்களை விதைப்பதும், குறிப்பிட்ட ஒரு அரசியல் இயக்கத்தை அழிப்பதே என் நோக்கம் என பிரகடனப்படுத்தி இயங்குவதும் மாரிதாஸின் இயல்பாக உள்ளது. மக்கள் சந்திக்கும் அடிப்படையான பல பிரச்சினைகளை பின்னுக்கு தள்ளி சதா ...