ஒரு மாணவத் தலைவரான கேப்ரியல் போரிக் மாபெரும் சர்வாதிகாரியும், அமெரிக்க ஆதரவு பெற்றவருமான அன்டனியோ காஸ்ட்டை தோற்கடித்தார். மக்கள் சக்தி ஒருங்கிணைந்தால் பணபலம், அதிகாரபலம் அத்தனையும் தூள்தூளாகும் என சிலி மக்கள் நிருபித்துள்ளனர்! இழுபறியாகவே முடியும் , என்று அனைவராலும் ஆருடம் கூறப்பட்ட சிலி நாட்டு அதிபர் தேர்தலில் அனவரது எதிர்பார்ப்புகளையும் முறியடித்து இடதுசாரி இயக்கத்தை சார்ந்த 35 வயதான இளைஞர் கேப்ரியல் போரிக் மாபெரும் வெற்றியடைந்துள்ளார். கம்யூனிஸ்ட் என்று வலதுசாரி அரசியல்வாதிகளால் முத்திரை குத்தப்பட்ட மாணவர் தலைவர் கேப்ரியல் போரிக் இடதுசாரி சிந்தனை ...