தமிழக அரசும், காவல் துறையும், உளவுத் துறையும் இந்துத்துவ சக்திகளின் அரசியல் அஜந்தாக்களை நிறைவேற்றத் துணை போகிறதோ..? என திகைக்க வைக்கும் சம்பவங்கள்! திசை மாறுகிறதா திராவிட மாடல்? கள்ளக்குறிச்சி சம்பவம் தொடங்கி, பிரதமர் மோடி வருகை வரை ஒரு பார்வை! ”நடப்பது திராவிட மாடல் ஆட்சியாக்கும்” என்று அது குறித்த பெருமிதங்களையும், கற்பிதங்களையும் மேடைகளில் எழுத்துக்களில் தொடர்ந்து கட்டமைத்து வந்தது திமுக! ஆனால், நடைமுறையோ அதற்கு துளியும் சம்பந்தமில்லாமல் உள்ளது. ‘விட்டுக் கொடுத்து போவது’, ‘விரோதமில்லாமல் நடந்து கொள்வது’ என்றால், அதில் தவறு ...

ஆன்லைன் சூதாட்ட விளையாட்டால் பாதிக்கப்பட்டு ஆயுதப் படை காவலர் வேலுச்சாமி தன் ஆயுளையே முடிவுக்கு கொண்டு வர முயன்றது அதிர்ச்சியை தோற்றுவித்துள்ளது! ஆன்லைன் சூதாட்டத்தால் அந்நிய நாட்டு பெருநிறுவனங்கள் ஆயிரக்கணக்கான கோடிகளை அள்ளிச் செல்வதோடு, பல குடும்பங்களையும் அழிவுக்கு தள்ளிவருகின்றனர். மக்களும், மாநில முதல்வர்களும் வலியுறுத்திய போதிலும் இதற்கு முடிவு கட்ட விரும்பாமல் மத்திய அரசு கள்ள மெளனம் சாதிப்பதின் பின்னணி என்ன..? சூதாட்டத்தின் விளைவாக ஏற்பட்ட மாபெரும் போரே மகாபாரதம் எனும் காவியம்! சூதாட்டத்தால் மானம், மரியாதை பறிபோய், ஒட்டுமொத்த குடும்பமே அழியும் ...