மகாத்மா காந்தியின் கொலைக்கு முன்னும், பின்னும் நடந்த வரலாற்று நிகழ்வுகளுக்கும், பாபர் மசூதி இடிப்புக்கு முன்னும்,பின்னும் நடந்தவற்றுக்கும் பெரிய வித்தியாசமில்லை! ஒரே வித்தியாசம் காந்தி கொலையின் தீர்ப்பு காங்கிரஸ் ஆட்சி காலத்தில் வந்துவிட்டது! அதுவே, பாஜக ஆட்சியில் வெளியாகி இருந்தால்,கோட்ஸே தியாகியாக்கப்பட்டிருப்பார் நீதி அரசர்களால்…! 28 ஆண்டுகள் இழுபறிக்குப் பிறகான காலதாமதபடுத்தப்பட்ட தீர்ப்பே மிகப் பெரிய அநீதியாகும்! இப்படி காலதாமாக்கப்பட்டதே…இந்த வழக்கில் உரிய நீதி வழங்குவதற்கு எவ்வளவு தடைக்கற்கள் இருந்துள்ளன என்பதற்கான விளக்கமாகிவிடுகிறது! உண்மை என்ற ஒன்று தெட்டெனத் தெரியும் போது அதை உறுதிபடுத்துவதற்கு தாமதம் செய்வானேன்? ஒரு தீமை கருக்கொள்ளும் போதே தடுத்திருக்க ...