காந்திக்கு நிகரான மாபெரும் இந்தியத் தலைவராக – அதிகார அரசியலில் இருந்து விலகி, மிகத் துணிச்சலுடன் மக்கள் நலன் சார்ந்த தொலை நோக்கு சித்தாந்தத்துடன் இயங்கிய – ஒருவர் உண்டென்றால், அது ராம் மனோகர் லோகியா தான்! காந்தியச் சிந்தனைகளை உள்வாங்கி, மண்ணுக்கேற்ற சோசலிச பார்வையோடு திகழந்தவர் சமரசமற்ற மாபெரும் தலைவர் ராம் மனோகர் லோகியா! பாசாங்குத்தனத்தையே பண்பாடாகக் கொண்ட இந்திய சமூகத்தில் தன்னை பட்டவர்த்தனமாக வெளிப்படுத்தி உண்மையின் ஒளியாய் ஜொலித்தவர் லோகியா! தனது பத்தாம் வயதிலேயே பொது வாழ்க்கைக்கு வந்த தலைவர் அவர்! ...