முன்னெப்போதும் இல்லாத வகையில், தற்போது காந்தி நினைக்கப்பட வேண்டியவராகிறார். விவசாயிகளை – மக்களை – அடிமைப்படுத்தும் மூன்று சட்டங்களை திரும்பப் பெறக் கேட்டு நடக்கும் இந்தப் போராட்டம் காந்தியைக் கொண்டாடும் ஒன்றாகும்! தில்லியின் எல்லையில் நடக்கும் போராட்டம் உலகம் கண்டிராத ஒன்றாக உள்ளது. இது எந்த ஒற்றைத் தலைமையின் கீழும் நடக்கவில்லை! போராட்டத்தில் சிறிதும் வன்முறை இல்லை. ஜன 26 ல் நடந்த வன்முறை – போராட்டத்தின் உறுதி கண்டு பயந்த அரசு செய்வதறியாது – போராட்டத்தை வன்முறையாளர்களின் போராட்டம் என்று மக்களிடம் சித்தரிக்க ...