கே.எஸ்.கவின், மணலூர்ப்பேட்டை, கள்ளக்குறிச்சி காமராஜர்_அண்ணா கலைஞர்_எம்.ஜி.ஆர் கலைஞர்_ஜெயலலிதா என்ற ஒப்பீட்டு வரிசையில் ஸ்டாலின்_….? காமராஜர், அண்ணா இருவரும் சுயம்புவாக உருவான தலைவர்கள்! கருணாநிதி, எம்ஜிஆர் இருவரும் தமிழக அரசியலை ஒன்மேன் ஷோவாக மாற்றியவர்கள்! கலைஞர், ஜெயலலிதா ஒருவருக்கொருவர் ஈகோவில் உச்ச நிலையைத் தொட்டவர்கள்! ஸ்டாலுனுக்கு ஈடு கொடுப்பதில் தான் தற்போது நான்கு முனை போட்டி நிலவுகிறது இ.பி.எஸ், ஒ.பி.எஸ், சசிகலா போதாது என்று அண்ணாமலையும் களத்தில் நிற்கிறார்! கட்சியில் அடுத்தகட்ட தலைவர்கள் அடையாளம் பெற்று எழுவதை எம்.ஜி.ஆர் விரும்பவில்லை. எம்.ஜி.ஆரை மீறி எழுந்து தன்னை ...