காந்தி ஜெயந்தியை வெறும் சடங்காக கடந்து போகிறது சமூகம்! ஒரு நாள் அரசு விடுமுறை அவ்வளவே! ஆனால், காந்தியப் பற்றாளர்களுக்கு அந்த நாள் மிக முக்கியமானதாகும்..உலகம் முழுவதும் “உலக அமைதி நாளாக” காந்தி பிறந்த அக்டோபர் இரண்டாம் நாள் கொண்டாடப்பட்டது. ’இந்த நாளின்போது நீங்கள் என்ன செய்தீர்கள்’’ என்ற கேள்வியை காந்தியப் பற்றாளர்கள் ஒரு சிலரிடம் கேட்டோம். ஆசைத்தம்பி, பத்திரிகையாளர் : (காந்தி பிறந்த 150ஆவது ஆண்டு விழாவின் போது வாரம்தோறும் தமிழ் இந்து நாளிதழில் தொடர்ந்து காந்தி குறித்த கட்டுரைகளை எழுதியவர்.’என்றும் காந்தி’ ...