ஒரு பொதுத் தேர்தல் நடத்த முடிகிறது. சட்டமன்ற கூட்டத் தொடர் நடத்த முடிகிறது. ஆனால், ஒரு சின்னஞ் சிறிய கிராம சபை கூட்டத்தை மட்டும் இங்கே நடத்த முடியவில்லை! மே 1, ஆகஸ்ட் 15, அக்டோபர் 2, என கடந்த ஆண்டிலும், ஜனவரி 26, மே 1 ஆகஸ்ட் 15 என இந்த ஆண்டிலும் இதுவரை ஆறு கிராம சபைகள் கூட்டப் படாமல் ரத்து செய்யப்பட்டுள்ளன. ஊரடங்கு காலங்களைத் தவிர்த்து இயல்பு நிலை திரும்பிய போதும், மதுக்கடைகள்,பொது போக்குவரத்து, சந்தைகள், பள்ளி, கல்லூரிகள் உள்ளிட்ட ...

















