மோடி என்றாலே பற்றி எரிகிறது பஞ்சாப்! கொந்தளிக்கும் விவசாயிகள்! குழந்தைகள் முதல் முதியோர் வரை குமுறும் பஞ்சாபிகள்! எல்லாம் தெரிந்திருந்தும் ஏன் சென்றார் பஞ்சாப்? தற்போது எதற்கிந்த மிரட்டல்கள்! இது எந்த சதித் திட்டத்திற்கான ஒத்திகை..? பிரதமர் மோடி பஞ்சாப் பயணத்தை தொடரமுடியாமல் திரும்பி வந்ததை ஒட்டி நேற்று ஏற்பட்ட சர்ச்சையில் ஏற்படும் கூச்சலும், கூப்பாடும், ஆத்திரமூட்டும் மிரட்டல்களும் ஆச்சரியமூட்டுகின்றன! கடந்த ஒருவருடத்திற்கும் மேலாக போராடி வரும் விவசாயிகள், குறிப்பாக பஞ்சாப் விவசாயிகள் மோடி அரசின் பல்வேறு அடக்குமுறைகள்,கேலி பேச்சுக்கள், ஏமாற்றல்களைத் தாண்டி வெற்றி ...