கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி இலங்கை தத்தளிக்கிறது. கிட்டத்தட்ட அத்தகைய ஒரு நெருக்கடியை நோக்கி இந்தியாவும் நகர்ந்து கொண்டிருக்கிறது! மூச்சை திணறடிக்கும் வெளி நாட்டுக் கடன்கள், கடுமையான உரத்தட்டுபாடு, வங்கிகளின் வாராக் கடன்கள்…உள்ளிட்டவை மிரட்டுகின்றன! அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகளின் கண்மூடித்தனமான சொத்து குவிப்பும், நேர்மையின்மையும் ஏற்கனவே மக்கள் வாழ்க்கையை பின்னுக்கு தள்ளியுள்ளது ஒரு புறமிருக்க, நமது தற்சார்பின்மையும், இறக்குமதியை நம்பியே விவசாயம், பார்மஸி, பெட்ரோலியம்..உள்ளிட்ட பல துறைகள் இயங்குவதும் நமக்கு பல சிக்கலை தந்து கொண்டுள்ளன. வருங்காலத்தில் இவை வீரியமடையும். மேலும் நாம் அளவுக்கு ...
கேள்வி கேட்டு அறிவை விசாலப்படுத்துவது தான் கற்றலின் அடிப்படை இலக்கணம். ஆனால், ஆசிரியர்களையே கேள்வி கேட்கவோ, விபரம் தெரிந்து கொள்ளவோ வழியற்ற புள்ளி விபரப் புலிகளாக்கி வருகிறது கல்வித்துறை. அரசின் அனைத்து நிர்வாகச் செயல்பாடுகள் நிறைவேற்றத்திற்கும் ஆசிரியர்களே பலியாடுகள்! இதனால், அரசுப் பள்ளி ஆசிரியர்களை அரசாங்கம் அறிவிக்கப்படாத ஒரு கொத்தடிமையாக கருதுகிறதோ என்ற சந்தேகம் கூட அவ்வப்போது வரத் தான் செய்கிறது. பேரு தான் வாத்தியார்! ஆனா, வருஷம் முழுக்க எங்களுக்கு வழங்கப்படும் பணிகளைக் கேட்டால் மலைச்சு போயிடுவீங்க! சட்டமன்ற தேர்தலா? பாராளுமன்ற தேர்தலா? ...
பள்ளிகள் திறக்கப்பட்டு 19 மாதங்களுக்குப் பிறகு ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரையுள்ள குழந்தைகள் வருகின்றனர். நமது தமிழக முதல்வர் பள்ளிகளுக்கு வரும் குழந்தைகளை வரவேற்று மிகவும் கனிவுடன் அறிவிப்பு தந்துள்ளார். பள்ளிகள் திறப்பையொட்டி கடந்த ஒரு வார காலமாகவே அதற்கான ஆயுத்தப் பணிகள் நடந்தன! தலைமை ஆசிரியர்களும், ஆசிரியர்களும் மிகவும் கவனமாக திட்டமிடல் செய்தனர்! ஆயினும் அடிப்படை வசதிகற்ற நிலையிலும், ஆசிரியர் பற்றாக்குறைகளிலும், விதவிதமான சவால்களை சந்திக்கின்றனர். ஆசிரியர்கள் தங்கள் பள்ளி மாணவர்களுக்கு எவ்வாறெல்லாம் திட்டமிட்டனர், கள எதார்த்தம்,அவர்கள் சந்திக்கும் சவால்கள் ...
சவால்களை சந்திக்கும் தமிழக பள்ளிக் கல்வி – 1 அரசுப் பள்ளிகள் பல்லாயிரக்கணக்கான ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படாமல் தள்ளாடுகின்றன! இந்தச் சூழலில் லட்சக்கணக்கான தன்னார்வலர்களைக் கொண்டு இல்லம் தேடிக் கல்வி திட்டமாம்! அதற்கு 200 கோடி செலவாம்! ஒன்றிய அரசின் புதிய கல்விக் கொள்கையின் ஒரு அம்சமே இத்திட்டம்! காலப் போக்கில் அரசுபள்ளிகளை காலாவதியாக்கும் ஆபத்துகள் இதில் புதைந்துள்ளன..! நவம்பர் 1 ஆம் தேதி, ஒன்று முதல் எட்டு வகுப்பு வரை கல்வி பயிலும் குழந்தைகளுக்கு பள்ளிகள் திறப்பு! ஏறக்குறைய 19 மாதங்களாக பள்ளிக்கு ...