பதவியேற்ற ஏழு ஆண்டுகளில், மோடி அரசாங்கம் இப்போது போல எப்போதும் ஆட்டம் கண்டதில்லை. அதனுடைய ஈர்ப்பின் சக்தி குறைந்து வருகிறது. கொரோனாவின் இரண்டாவது அலையைக் கோளாறாகக் கையாண்டது – குறைவான பரிசோதனை செய்தது மற்றும் இறந்தவர்களின் எண்ணிக்கையைக் குறைத்தது, பெருந்தொற்றை எதிர்கொள்ள ஆயத்தமில்லாமல் போனது, ஆக்ஸிஜன் பற்றாக்குறை மற்றும் தடுப்பூசி போடுதலில் ஏற்பட்ட குளறுபடிகள் – கொடுமையின் எல்லையை நிரூபித்துள்ளது… ஆகியவை மோடி மீது வலுவான சந்தேகத்தை தோற்றுவித்துள்ளது! மோடியின் பரம விசுவாசிகள் பலருக்கே கூட, இந்த முக்கியமான காலகட்டத்தில் அரசாங்கம் என்ற ஒன்று ...
மத்திய – மாநில அரசுக்கிடையிலான அதிகார பகிர்வு, கடைபிடிக்க வேண்டிய உறவுகள்.. ஆகியவை குறித்து மறுபரிசீலனை செய்ய வேண்டிய காலகட்டம் வந்துள்ளது! ”பரஸ்பர மரியாதையா..? ஆண்டான் – அடிமை உறவா..?” – இரண்டில் ஒரு முடிவுக்கு வந்தேயாக வேண்டும்.! ‘’பேசுவதற்கு வாய்ப்பில்லை’’, ‘’அமைச்சருக்கு அழைப்பில்லை, அவருக்கு கீழ் இருக்கும் அதிகாரிக்கு தான் அழைப்பு’’ ஐந்து நிமிஷம் பேசத் தான் அனுமதி மாநிலஅரசு அதிகாரிகளை எந்த நேரத்தில் வேண்டுமானாலும் பந்தாடுவேன். என்ற ஆதிக்க மன நிலையில் இனி மத்திய அரசாங்கம் செயல்படுவது கேள்விக்குறியாக்கப்பட்டுள்ளது! ‘’மாநில அரசுகள் ...
ஆரம்பிச்சுட்டாங்கய்யா..! இன்னும் ஆட்சிக்கு வந்து ஒரு மாதம் கூட முழுசா முடியல..! அதுக்குள்ள அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள்…! கொரோனாவில் தோல்வியாம்! உதவிகளில் பாரபட்சமாம், பிராமணர்கள் தாக்கபடுகிறார்களாம்…! முதலமைச்சரும், அமைச்சர்களும், எம்.எல்.ஏக்களும் முழுமையான ஈடுபாட்டுடன் மக்கள் பணியில் தங்களை அர்ப்பணித்துக் கொள்வது தான் இவர்கள் பிரச்சினையே! இது நாள் வரை செயல்படாத ஆட்சியை பார்த்திருந்த மக்கள் மத்தியில், ஒரு செயல் துடிப்புள்ள ஆட்சி ஏற்படுத்தும் தாக்கங்கள் இவர்களை எப்படி பதட்டமடைய செய்கிறது… பாருங்கள்! எனவே ஆளாளுக்கு அலறுகிறார்கள்! குதர்க்கம் பேசுவது, குற்றச்சாட்டுகள் அடுக்குவது, தனிப்பட்ட நடத்தைகளை கேள்விக்குள்ளாக்குவதுன்னு ...