மூன்றாம் கட்ட பரிசோதனைக்கு முன்பே அவசரமாக தடுப்பூசியை அரசாங்கம் அமல்படுத்துவதால் அரசியல்வாதிகளும், மருத்துவர்களிடையேயும் தடுப்பூசி போட்டுக் கொள்வதில் பெரும் தயக்கம் நிலவுவதை நாம் அறம் இதழில் சுட்டிக் காண்பித்தோம்! அதைத் தொடந்து அரசு மருத்துவர்களுக்கான சட்டபோராட்டக் குழு இப்படி ஒரு அறிக்கை வெளியிட்டு உள்ளது குறிப்பிடதக்கது! தமிழகத்தில் கொரானாவுக்கான தடுப்பூசி போடப்பட்டு வரும் நிலையில் அரசு மருத்துவர்களுக்கான சட்டப் போராட்டக்குழுவின் தலைவர் டாக்டர்.பெருமாள் இவ்வாறு ஒரு அறிக்கை வெளியிட்டிருப்பது ஆச்சரியமளிக்கிறது! அவரிடம் தொடர்பு கொண்டு பேசிய போது, ”இந்த அரசு கொரானா சிகிச்சைப்பணியின் போது ...