கொரோனாவை வெற்றிகரமாக சமாளித்து, மக்களை குணப்படுத்தியதில் அரசு மருத்துவர்களின் பங்களிப்பு மறுக்க முடியாததாகும்! தமிழகத்தில் இது வரை 7,22,000 க்கு மேற்பட்டவர்கள் கொரானாவில் பாதிக்கப்பட்டு,அதில் 6,88,000 பேர் குணமடைந்துள்ளனர் என்றால்,அவர்களில் மிகப் பெரும்பான்மையினர் அரசு மருத்துவர்களின் அர்ப்பணிப்பால் தான் குணமடைந்துள்ளனர் என்பது அனைவரும் ஏற்றுக் கொள்ளும் உண்மையாகும்! வெறும் பதினெட்டாயிரம் அரசு மருத்துவர்கள் கடும் உழைப்பை ஈந்ததில் தான் இது சாத்தியப்பட்டது. இதில் அரசு மருத்துவர்களோடு பட்ட மேற்படிப்பு மாணவர்களும் சேர்ந்து பாடுபட்டனர். நோயாளிகளை குணப்படுத்தும் போது ஆயிரத்திற்கு மேற்பட்ட மருத்துவர்களும் கொரனாவால் தாக்கப்பட்டனர். ...

ஆபத்தான வகையில் ஆளைக் கொல்லும் கொரோனாவுக்குப் பிறகு தான் அரசு மருத்துவமனைகளின் முக்கியத்துவம் மற்றும் அரசு மருத்துவர்களின் சேவை ஆகியவை தமிழகத்தில் கவனம் பெற்றன! முதல் மூன்று  மாத காலகட்டத்தில் தனியார் மருத்துவமனைகள் அனைத்தும் இழுத்து மூடப்பட்டிருந்தன. சாதாரண நோய்க்குக் கூட தனியார்கள் அப்போது மருத்துவம் பார்க்க மறுத்துவிட்டனர். அதே சமயம் அரசு மருத்துவர்கள் அஞ்சாமல் களம் கண்டனர். இதில் ஆயிரத்திற்கு மேற்பட்ட அரசு மருத்துவர்கள் கொரானா தொற்றுக்கு ஆளானார்கள்.. இதில் மதுராந்தகம் டாக்டர் சுகுமாறன், தூத்துக்குடி டாக்டர் கல்யணராமன் ஆகிய இருவர் பலியானார்கள்.ஆனபோதிலும் ...