மருத்துவ கல்வியில் அரசு பள்ளி மாணவர்கள் வாய்ப்பு பெற்று வருவது அளப்பறிய சந்தோஷத்தை ஏற்படுத்துகிறது. ஆடு மேய்க்கும் கூலி தொழிலாளி,விவசாய கூலிகள் போன்றோரின் குழந்தைகளுக்கெல்லாம் எம்.பி.பி.எஸ்சீட் கிடைத்தது போன்ற செய்திகளெல்லாம் நம் மனதில் ஏற்படுத்தும் பரவசத்தை வார்த்தைகளில் விவரிக்க இயலாது! ஆயினும், இந்த மகிழ்ச்சிகிடையில் சில யதார்த்தங்களை புறந்தள்ள முடியாது. ஒரு வகையில் இந்த 7.5% ஒதுக்கீடு என்பது நமக்கு பெருமை தரக்கூடியதல்ல,சிறுமையே! இதை தான் இந்த கட்டுரையில் கூறவுள்ளேன். அரசு பள்ளிகளின் அவல நிலைக்கு குறிப்பாக அவசியமான பல சப்ஜெக்ட்களுக்கு கூட ஆசிரியர்கள் ...