அரசுப் பள்ளி ஏழை,எளிய மாணவர்களுக்கு மருத்துவ கல்வியில் 7.5 சதவிகித உள் ஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை மத்திய அரசு விரும்பவில்லை என்பது பட்டவர்த்தனமாகத் தெரிகிறது! தமிழகத்தின் மொத்த ப்ளஸ் டூ மாணவர்களில் 41% அரசுப்பள்ளி மாணவர்கள்! ஆனால், மருத்துவ படிப்புக்கு இதில் ஒரு சதவிகித மாணவர்களுக்கு கூட வாய்ப்புகள் கிடைப்பதில்லை.இதைக் கருத்தில் கொண்டு அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ கல்வியில் 7.5% உள் ஒதுக்கீடு தமிழக அரசு கொண்டு வந்தது.ஆனால், இன்று வரை அதற்கு தமிழக ஆளுனர் ஒப்புதல் தரவில்லை. இதன் பொருள் இதில் ...