மனவளர்ச்சி குன்றிய ஒருவனின் காதலை மிக நுட்பமாக மன முதிர்ச்சியோடு எடுத்திருக்கிறார் இயக்குனர். மொழிகளைக் கடந்த ரசனைக்குரியது காதல். ஸ்பானிய மொழியில் எடுக்கப்பட்ட அர்ஜென்டினா நாட்டுக் காதலை அழகியலுடன் சொல்கிறது, கோயோ! மானுட உறவுகளின் மாண்பைச் சொல்லும் படம்; கோயோ என்பவன் அருங்காட்சியகத்தின் வழிகாட்டியாக இருக்கிறான். 1..2..3…என்று எண்ணிக் கொண்டே அவன் படிகளில் ஏறுவதில் கதை தொடங்குகிறது. அங்குள்ள கலைப் பொருட்களின் விவரம், தொன்மை போன்ற விவரங்களை மிக நுட்பமாக பார்வையாளர்களுக்கு விவரிக்கிறான். ஆனால், அவன் ஆட்டிசம் என்ற மன வளர்ச்சி்க் குறைபாடு கொண்டவன். ...