150 வது பிறந்த நாளிலாவது வ.உ.சி கூடுதல் முக்கியத்துவம் பெற்றுள்ளார் என்பது மகிழ்ச்சியளிக்கிறது. பொது வாழ்வில் நேர்மைக்கு இலக்கணமாய், தூய தொண்டுக்கு அடையாளம் திகழ்ந்தவர் வ.உ.சி! லட்சியவாதிகள் வாழ்நாள் முழுதும் வறுமையிலும், துன்பத்திலும் உழல்வதும், சந்தர்ப்பவாதிகள் பதவி, பணம், அதிகாரம் என சுகபோகம் பெறுவதும் இன்றல்ல, நேற்றல்ல..தொடர்கதை தான் என்பதற்கு வ.உ.சியே மாபெரும் உதாரணம்! செல்வ குடும்பத்தில் பிறந்து, வளர்ந்து நாட்டின் சுதந்திரத்திற்காகவும், தொழிலாளர்கள் உரிமைக்காகவும் பாடுபட்டதற்காக அவர் பெற்ற பரிசுகளே துன்பங்களும்,வறுமையும்! தமிழ்நாட்டின் முதல் மக்கள் தலைவர் மட்டுமல்ல, மாபெரும் தியாகி, தமிழ் ...