சம்பாதிக்க கற்றுக் கொள்வதற்குள் கடன் வாங்க கற்றுக் கொடுக்கும் வங்கிகள்! தனி நபர் கடன்கள்,கிரடிட் கார்டுகள், Lazypay.. இந்த வலைப் பின்னலுக்கு பின்னால் இருக்கும் சூழ்ச்சிகள் என்ன..? கண்ணை மூடிக் கொண்டு கடன் வாங்கியவர்களின் கதி என்னவாகிறது..? இந்தியாவில் பெரும்பாலான மக்கள், அடி நிலை, நடுத்தர நிலை மக்களாகும். இவர்களுக்கு வாழ்க்கை முழுவதும் பணத் தட்டுப்பாடு இருந்து கொண்டே இருக்கும். இவர்களிடம் வங்கிகளே நாங்கள் தனிநபர் கடன் கொடுக்கிறோம், அதற்கு எந்த வித அடமானமும் தேவை இல்லை. உங்கள் சம்பள விவரம், வங்கி ஸ்டேட்மென்ட் ...