ஜி.எஸ்.டி வரிமுறை மாநில அரசின் வரி வசூலிக்கும் அதிகாரத்தை பறித்துக் கொண்டது. கார்ப்பரேட்டுகளின் நன்மைக்காக மாநில உரிமைகளை காவு கொடுக்கிறது! மாநிலங்களை எந்த வகையிலும், சுயசார்பில்லாமல் செய்து, மத்திய அரசிடம் மண்டியிட வைக்கிறது! இந்தியாவில் இதை தட்டிக் கேட்கும் திரானியுள்ள ஒரே மாநிலமாக தமிழகம் உள்ளது! நாளைய கூட்டத்தில் நடக்கப் போவது என்ன..? செப்டம்பர் 17 ந்தேதி ஜி எஸ் டி உயர்மட்டக்குழுவின் 45 வது கூட்டம் நடைபெற உள்ளது. சென்ற கூட்டத்தில் பட்டாசுகள் படபடத்தன. நமது நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் அனல் ...