நேஷனல் ஹெரால்டு விவகாரம் தற்போது பரபரப்பாகவும், அரைகுறையாகவும் விவாதிக்கப்பட்டு வருகிறது! ராகுல் காந்தியை அமலாக்கத்துறை அதிகாரிகள் பல மணி நேரம் விசாரணை செய்து, அலைக்கழித்து வருகிறார்கள்! காங்கிரஸ் தொண்டர்கள் போராட்டக் களம் கண்டுள்ளனர்! உண்மையில் நடந்தது என்ன? மலையை கிள்ளி எலியை பிடித்த கதையாக விசாரணை 11 மணிகளை தாண்டியதும் , தொடர்ந்து அடுத்தடுத்த நாட்கள் விசாரணை தொடர்வதும் காங்கிரஸ் தலைவர்களை தடுப்புக் காவலில் கைது செய்வதும், போராடும் தொண்டர்களை அடித்துத்தள்ளி அநாகரீகமாக நடத்துவதையும் நாம் கண்ணுற்றோம் . அமலாக்கத்துறை காங்கிரஸ் தலைவர் சோனியா ...